இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் தாக்கமும் பரவல் விகிதமும் குறைவாக உள்ளது. ஆனாலும், ஆபத்திற்குட்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பாலியற் தொழிலும் ஓரினச் சேர்க்கையும் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.[1][2][3]

2001 இல் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோர் எண்ணிக்கை 7500 ஆக இருந்தது 2011 இல் 2800 ஆக குறைந்துள்ளது.[4] இதனால் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோரைக் கொண்ட 162 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் உள்ளது.[5] இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் பரவல் விகிதம் 0.1 வீதமாகக் காணப்படுகையில் பெண்கள் நோய்த்தாக்கத்திற்குள்ளாகும் வீதம் கூடுதலாகக் காணப்படுகிறது. எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழும் ஆண், பெண் விகிதம் 1.4 க்கு 1 என உள்ளது.[2]

உசாத்துணை

தொகு
  1. "MSM to lead HIV/AIDS in Sri Lanka by 2015". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  2. 2.0 2.1 HIV/AIDS in Sri Lanka
  3. HIV/AIDS in Sri Lanka - World Bank
  4. HIV/AIDS - people living with HIV/AIDS - Death
  5. HIV/AIDS - people living with HIV/AIDS

வெளி இணைப்புக்கள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு