இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956

இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956, கொழும்பிலும் பிற இடங்களிலும் 150ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். ஜூன் 5, 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையை தடுக்கப் பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த வன்முறை பரவி கொழும்பிலும் பின்னர் பிற இடங்களிலும் 150 மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர், சிங்கள், இனங்களுக்கிடையான பிரிவு பின்னர் தீவிரமான வன்முறைகளுக்கு தூண்டுதலான முதல் கொடிய வன்முறை சம்பவம் எனலாம்.

இதில் மேல்வர்க்க தமிழர்களும் இன ரீதியில் தாக்கப்பட்டது அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திருப்பியது. இதன் காரணமாக பல கொழும்பு வாழ் தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தார்கள்.

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு