இலங்கையில் பலதார மணம்

இலங்கையில் பலதார மணம் சட்டவிரோதமானதும் இக்குற்றத்திற்கு தண்டனை மற்றும் சிறைத் தண்டனை என்பவற்றை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.[1] ஆயினும், இசுலாமில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி முஸ்லிம் ஆண்கள் நான்கு மனைவியரைக் கொண்டிருக்கலாம். முஸ்லிம் ஆண்களுக்கு இச்சட்டம் விதிவிலக்கு. மிக குறைந்தளவு முஸ்லிம் ஆண்களே (இலங்கை சனத்தொகையில் 7 வீதமானோர் முஸ்லிம்கள்) பல மனைவிகளைக் கொண்டுள்ளனர். அநேகமாக மற்ற நாடுகளில் பலதுணை மணம் அனுமதிக்கப்படுவதை போன்று, கணவன் தன்னுடைய முதல் மனைவியிடம் முறைப்படி தான் பல மனைவிகளை மணம் முடிக்க இருப்பதை தெரிவிக்க வேண்டும்.[2] முஸ்லிம் ஆண்களுக்கு சட்டம் பலதார மணத்திற்கு அனுமதிக்கின்றபோதும், பெண்கள் உரிமை அமைப்புக்கள் இந்த விடயத்தில் பெண்களின் உரிமைகள் மட்டில் ஆர்வம் காட்டுகின்றன.[3]

இலங்கை போன்று பலதார மணம் குடிசார் சட்டத்தின் கீழ் காணப்படும் நாடுகள் கருநீல நிறத்தில் காணப்படுகின்றன

இன்று முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் சட்டத்தில் பலதார மணத்திற்கு இடமிருப்பினும், புராதன இலங்கையில் பலதார மணம் காணப்பட்டிருந்தது. குறிப்பாக சிங்கள அரச குடும்பங்களில் காணப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன.[4] அத்துடன் கலிங்க கடல் வர்த்தகர்கள் இலங்கையில் பெண்களை மணந்து, பலதார மண பழக்கம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. FAMILY LAWS SRI LANKA
  2. "Sri Lanka: Family Code". Archived from the original on 2010-10-27. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
  3. "Engaging With Muslim Personal Law in Sri Lanka". Archived from the original on 2010-05-14. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
  4. The Position of Women in Buddhism
  5. Journey from Kalinga to Singhal (Sri Lanka)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_பலதார_மணம்&oldid=3544480" இலிருந்து மீள்விக்கப்பட்டது