இலங்கையில் யூதரின் வரலாறு
இலங்கையில் யூதரின் வரலாறு குறைந்தது 9ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகிறது. 10ம் நூற்றாண்டில், பேர்சியாவின் சிரப் எனுமிடத்திலிருந்த அபு செயிட் அல் கசன் எனும் அராபிய பயணி 'பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள்' செரண்டிப்பில் இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அக்கால அராபியர் இலங்கையை செரண்டிப் எனும் பெயரால் அழைத்தனர்.[1]
12ம் நூற்றாண்டில், டுடேலாவிலுள்ள பென்யமீன் எனும் யூதரின் அறிக்கையில் இலங்கையில் 3000 யூதர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[2] இவ்வறிக்கை நம்பகரமானதென கருதவும் முடியாது.
ஆரம்ப காலத்தில் இலங்கையிலிருந்த யூதர்கள் உள்ளூர் மக்களுடன் கலந்துவிட்டிருக்கலாம் அல்லது 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய வருகையுடன் அவர்களின் அடையாளத்தையும் நம்பிக்கையையும் கைவிட்டிருக்கலாம். போர்த்துக்கேய கடும் விசாரணைகளுக்கு உட்பட்டு அவர்கள் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.