இலங்கை கடற்படையின் ஆயுதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்
ஆயுத கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள் (Sri Lanka Navy anti arms smuggling operations) என்பது 2006 செப்டம்பர் மற்றும் 2007 அக்டோபருக்கு இடையில் இலங்கைக் கடற்படையால் தொடங்கப்பட்ட ஆயுதக் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் ஏற்றிவந்த வணிகக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் ஆறு முறை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன.[1][2][3]
நான்காம் ஈழப் போரின் தொடக்கத்திலிருந்து இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு வரும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இடைமறிக்கத் தொடங்கினர். இதன் மூலம், மன்னாரின் தெற்கே பீரங்கி குண்டுகள், மோட்டார் குண்டுகள் மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்களைக் கொண்டு வந்த புலிகளின் 11 இழுவைப் படகுகளைக் கடற்படை அழித்தது. இழுவைப் படகுகள் மூழ்கியது தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில், இலங்கையிலிருந்து 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசியக் கடற்பரப்பிலிருந்த சரக்குக் கப்பல்களே ஆயுதங்களின் ஆதாரம் என்று கடற்படையினர் அறிந்தனர். சிறிய அளவிலான இராணுவ உபகரணங்களை ஏற்றிவரும் இழுவைப் படகுகளை நிறுத்துவது ஒரு முடிவடையாத பணியாக உள்ள காரணத்தினால், விடுதலைப் புலிகளுக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகச் சேவையாற்றிய அந்தக் கப்பல்களை அகற்றக் கடற்படை தீர்மானித்தது. அதற்கான உளவுத் தகவல்களைச் சேகரித்து, ஏறக்குறைய ஒரு ஆண்டாகத் திட்டமிட்டுச் செயல்படுத்திய கடற்படை, 2007ஆம் ஆண்டு முதல் ஆழ்கடல் நடவடிக்கையைத் தொடங்கியது. துவக்கத்தில் சில தாக்குதல் பயணங்கள் தோல்வியில் முடிந்தன. எவ்வாறாயினும், விரிவான புலனாய்வு பகுப்பாய்வு மூலம், கடற்படை 2007 பெப்ரவரி 28 அன்று இலங்கைக்கு தெற்கே சுமார் 360 கி.மீ தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் முதல் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டறிந்து அதை அழித்தனர். மேலும் இரண்டு கப்பல்கள் 18 மார்ச் 2007 அன்று இலங்கைக்குத் தென்கிழக்கே 1,400 கி.மீ தொலைவில் இந்தோனேசியாவிற்கு அருகே கண்டறிந்து மூழ்கடிக்கப்பட்டன. அத்திரேலியாவுக்கு அருகில் இலங்கைக்குத் தென்கிழக்கே 3,000 கி. மீ தொலைவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடற்படை மூன்று கப்பல்களை கண்டுபிடித்து அவற்றை 2007 செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அழித்தது. இறுதிக் கப்பல் இலங்கையிலிருந்து 2,900 கி.மீ தொலைவில் இந்தோனேசியாவுக்கு அருகில் 2007 அக்டோபர் 7 ஆம் தேதி கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இ்வ்வாறு 10 மில்லியன் கிலோ இராணுவ படைக் கலன்களை அழித்ததாகக் இலங்கைக் கடற்படை கூறியது:
- 152 மிமீ மற்றும் 130 மிமீ பீரங்கிகளுக்கான 80,000 குண்டுகள்
- 81 மிமீ மற்றும் 120 மிமீ மோட்டார் 100,000 க்கும் மேற்பட்ட மோட்டார் குண்டுகள்
- பிரித்துக் கொண்டுவரப்பட்ட மூன்று வானூர்திகள்
- ஜெட் ஸ்கிஸ்
- மூழ்காளர் விநியோக வாகனங்கள்
- டைவிங் ஸ்கூட்டர்கள்
- டார்பிடோ படகுகள்
- வெடிபொருட்கள்
- மின்னணுவியல் பொருட்கள்
- கடற்புலிகள்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு திறன்கள் கொண்ட வெளிப்புற மோட்டார் குண்டுகள்
- இரவு பார்வை உபகரணங்கள்
- ரேடார்
இந்த ஆயுத இழப்புகள் தரைவழிப் போரில் புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Man Behind The Naval Strategy
- ↑ Sri Lankan Navy seizes rebel arms smuggling ship
- ↑ Sri Lanka Navy Outlines Importance of Maritime Hub in Seminar Sessions
- ↑ "LTTE Vessel with Arms &; Other Items Goes in Flames after Navy Intercepted". army.lk. Sri Lanka Army. பார்க்கப்பட்ட நாள் 6 January 2024.