இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான்

பறவை துணையினம்

இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் (அறிவியல் பெயர்: Hemipus picatus leggei) என்பது பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் துணையினம் ஆகும். இது இலங்கையின் மலைக்காடுகளில் காணப்படுகிறது.[1]

விளக்கம்

தொகு

இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானை ஒத்தே இருக்கும். ஆனால் இது பால் ஈருருமை இல்லாமல் ஆண் பெண் என இரு பறவைகளும் ஒன்றுபோலவே இருக்கும்[2] (பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான் பறவையில் பெண் பறவையின் முதுகு ஆண் பறவையின் முதுகு போல கறுப்பாக இல்லாமல் புகை கறுப்பாக இருக்கும்).

நடத்தை

தொகு

இப்பறவைகளில் ஆண் பறவையும் பெண் பறவையும் மாறி மாறி குரல் எழுப்பி டூயட் பாடுவதாக அறியவருகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ali, S & S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. Vol. 6 (2nd ed.). Oxford University Press. pp. 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-562063-1.
  2. Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ed.). Gurney and Jackson, London. pp. 144–145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-4576-6.
  3. Thorpe, W.H. (1972). Duetting and antiphonal song in birds – its extent and significance. Behaviour Monograph Supplement 18. E J Brill, Leiden. p. 8.