இலங்கை பச்சைக் குக்குறுவான்
இலங்கை பச்சைக் குக்குறுவான் (அறிவியல் பெயர்: Psilopogon zeylanicus zeylanica) என்பது பச்சைக் குக்குறுவானின் துணையினம் ஆகும்.[1] இது தென் கேரளத்திலும், இலங்கையிலும் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஇலங்கை பச்சைக் குக்குறுவான் பறவையானது தோற்றத்தில் பெரிதும் பச்சைக் குக்குறுவானை ஒத்து இருக்கும். ஆனால் இதன் உடலின் மேற் பச்சை நிறம் சற்று ஆழமாக இருக்கும். கழுத்திலும் மார்பிலும் சிறு கோடுகள் காணப்படும். மேல் வயிறு வரை மட்டுமே பழுப்பு நிறம் காணப்படும். இறக்கைகளில் தூய்மையற்ற வெள்ளைப் புள்ளிகள் காணப்படும்.[2]
இதன் பழக்க வழக்கங்களும் இனப்பெருக்கமும் பெரும்பாலும் சின்னக் குக்குறுவானை ஒத்தன.[2]