இலங்கை விமானப்படை மகளிர் பிரிவு

இலங்கை இராணுவ அலகு

இலங்கை விமானப்படை மகளிர் பிரிவு (Sri Lanka Air Force Women's Wing) 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இங்கு இலங்கை விமானப்படையின் பெண் உறுப்பினர்கள், விமானப் பெண்கள் மற்றும் பெண் அதிகாரிகள் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் மட்டும் இப்பிரிவில் சேரலாம். இந்த பிரிவின் உறுப்பினர்கள் போர் பாத்திரங்கள் உட்பட அனைத்துப் பணிகளும் ஆண்களுக்கு இணையான அதே வகையான பணிகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர்.[1][2] 1972 ஆம் ஆண்டு பெண் அதிகாரிகள் தன்னார்வ விமானப்படையில் இணைந்த போது முதன்முதலில் இலங்கை விமானப்படையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.[3] பிரித்தானியாவின் மகளிர் ராயல் விமானப்படை உதவியுடன் 1983 ஆம் ஆண்டில் மகளிர் பிரிவு உருவாக்கப்பட்டது.[1] ஆரம்பத்தில் இலங்கை விமானப்படை மகளிர் பிரிவில் பெண்கள் விமானிகளாக ஆக முடியாது.[3] இருப்பினும் 1998 ஆம் ஆண்டில் தமிழ் புலிகளின் கிளர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பதிலாக உயரடுக்கு விமானிகள் பிரிவுக்கு பயிற்சியளிக்க பெண்கள் நியமிக்கப்பட்டனர். 800 பெண்கள் போக்குவரத்து விமானங்களில் பறக்க 33 இடங்களுக்கு விண்ணப்பித்தனர். இப்பதவிகளில் கட்டளையிடும் அதிகாரிகளும் அடங்குவர்:[4]

  • விமான துணை உயர் அலுவலர் ஜி.டி. பெரேரா (1 ஆகத்து 2002 வரை)[5]
இலங்கை விமானப்படை மகளிர் பிரிவு
Sri Lanka Air Force Women's Wing
மகளிர் சீருடற் பயிற்சி (2012)
உருவாக்கம்1983; 41 ஆண்டுகளுக்கு முன்னர் (1983)
நாடுஇலங்கை
கிளைஇலங்கை வான்படை
சண்டைகள்ஈழப் போர்
  • குழு தலைவர் எம். எச். கரன்னாகொட (2 ஆகத்து 2002 முதல்)[5]

விமானப் பெண்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான பதவிச் சின்னங்கள் அவர்களின் ஆண் சகாக்களைப் போலவே இருக்கும். மேலும் அனைத்து விமானப் பெண்களும் மாசுட்டர் வாரண்ட்டு அலுவலர் என்ற பதவியை அடையலாம். இப்பதிவி விமானப்படை வீரருக்கான மிக உயர்ந்த பதவியாகும், மேலும் பெண்கள் ஆண்களைப் போலவே அனைத்து வர்த்தகங்களையும் பெறலாம்; மறுபுறம், கடற்படைப் பணி முதல்வர் பதவியை விட பெண் அதிகாரிகள் வேறு பதவி உயர்வு எதுவும் பெற வாய்ப்பில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Women's Wing". airforce.lk.
  2. Sri Lanka Air Force Headquarters. "Recruits Pass Out In Ampara". airforce.lk. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
  3. 3.0 3.1 Raj K. Mehta, Lost Victory: The Rise & Fall of LTTE Supremo, V. Prabhakaran, p. 135, Pentagon Press, 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182744431.
  4. Research Directorate, Immigration and Refugee Board, Canada, "Sri Lanka: Organization and structure of the Sri Lankan Airforce including ranks, units, squadrons and the duties assigned to different personnel; location of squadrons and departments", UNHCR Refworld, Canada: Immigration and Refugee Board of Canada, 14 March 2001.
  5. 5.0 5.1 "2002 Sri Lanka Air Force Annual Performance Report" (PDF). Parliament of Sri Lanka. p. 6.