இலடோ பாய் (Lado Bai) மத்திய பிரதேசத்தின் பில் இனத்தைச் சேர்ந்த பழங்குடிக் கலைஞர் ஆவார். இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு கண்காட்சிகளில் இவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [1] இவர், போபாலின் ஆதிவாசி லோக் கலா அகாதமியில் வசித்து வருகிறார். [2]

ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும் தொகு

இலடோ பாய் மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தின் பாடி பவாடி கிராமத்தில் பில் பழங்குடி சமூகத்தில் பிறந்தார். [2] மிகச் சிறிய வயதிலேயே, இவர் தனது குடும்பத்தினருடன் போபாலுக்குச் சென்று, பாரத் பவன் கட்டிடத்தில் தொழிலாளியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இவர் திருமணம் செய்துகொண்டு கட்டிட வளாகத்தில் தொடர்ந்து பணியாற்றினார். மேலும் ஒரு நாள் தனது பணியில் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் வண்ணம் தீட்ட ஆரம்பித்தார். [3] [4]

பின்னர் இவர், பூரி பாயுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். [5] இவரது கலை இவரது சமூகத்தின் ஆன்மீகத்தையும் தெவீகத் தன்மையையும் பிரதிபலிக்கிறது. [6] பல ஆண்டுகளாக, நிதிப் பற்றாக்குறை காரணமாக இவரால் தனது கலையைத் தொடர முடியாமல் இருந்தார். பிரபல இந்தியக் கலைஞரான ஜகதீஷ் சுவாமிநாதன் கண்டுபிடித்தப் பின்னர், இவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. ஆதிவாசி லோக் கலா அகாதமியில் பணியாற்றும்படி சுவாமிநாதன் இவரை ஊக்குவித்தார். அங்கு திருவிழாக்கள், சடங்குகள் மற்றும் விலங்குகளின் படங்களை சுவரிலிருந்து காகிதத்திற்கு மாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

பில் கலை தொகு

பில் பழங்குடியினம் பூர்வீகமாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி சமூகமாகும். கலையானது இவர்களில் சமூகத்தில் ஒருங்கிணைந்த ஒன்றாகும். [7] இவர்களின் ஓவியங்களின் வளமான அமைப்பு பொதுவாக இயற்கையையும் ஆதிவாசி பாணியையும் சித்தரிக்கிறது. இது அவர்களின் மரபாக இருக்கிறது. பில் கலைஞர்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். [6] நமது நவீன சமுதாயத்தில் பெரும்பாலும் மறந்துபோன அறுவடைகள், பிறப்பு மற்றும் பிற சடங்கு சந்தர்ப்பங்களில் எளிய மனிதர்களின் சந்தோஷங்களை அவை வரையப்படுகின்றன.

குடும்பம் தொகு

இவரது குடும்பமும் ஓவியம் தீட்டுவதில் இவருடன் சேர்ந்து கொள்கிறது. படத்தின் கூறுகள் இவரது முன்னோர்களின் ஆழ்ந்த கூட்டு நினைவிலிருந்து பெறப்படுகின்றன. இது பித்தோரா பாரம்பரியத்தில் இவர் வெளிப்படுத்தியுள்ளார். [8] [9] அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் மற்றும் தினை சேகரிக்கும் விவசாயிகள், சந்தையின் கூடாரங்கள், அதன் கடைகள், விளைப்பொருட்களுடன் செல்லும் காளை வண்டிகள் ஆகியவற்றை இவர் சுட்டிக்காட்டுகிறார். இவரது மகள் அனிதா சுவர் ஓவியங்களை வரைவதற்கு இவருக்கு உதவினார்.

கண்காட்சி தொகு

2017இல் புது தில்லி, சத்ராங், ஓஜாஸ் கலைக் கண்காட்சியில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றன [10]

மேற்கோள்கள் தொகு

  1. "Lado Bai | Paintings by Lado Bai | Lado Bai Painting". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
  2. 2.0 2.1 "Lado Bai". Bhil Art. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
  3. ravindra koshish art (20 October 2018), Folk And Tribal Painter Lado Bai's Lively Art Travel in India, பார்க்கப்பட்ட நாள் 18 March 2019
  4. "थकान मिटाने के लिए बनाती थीं चित्र, मिला राष्ट्रीय सम्मान". Nai Dunia. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
  5. "Lado Bai | IGNCA". பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
  6. 6.0 6.1 "BHIL ART: TRIBAL PAINTINGS FROM INDIA". The Saffron Art Blog. 14 December 2012.
  7. "The Bhils". Bhil Art. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
  8. "tribal art mural".
  9. "bhil art".
  10. "An exhibition that explores folklore and mythology through tribal art". Hindustan Times. 25 August 2017. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலடோ_பாய்&oldid=3133273" இலிருந்து மீள்விக்கப்பட்டது