இலந்தனம் கோபால்ட்டைட்டு

இலந்தனம் கோபால்ட்டைட்டு (Lanthanum cobaltite) என்பது LaCoO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். திண்மமான இச்சேர்மம் பெரொவ்சிகைட்டு கட்டமைப்பு கொண்டது ஆகும். அறை வெப்பநிலையில் சாய்செவ்வக கட்டமைப்பில் இலந்தனம் கோபால்ட்டைட்டு காணப்படுகிறது. ~900 ° செல்சியசு வெப்பநிலையில் கனசதுர அணிக்கோவை நிலைக்கட்டத்தை இதன் கட்டமைப்பு அடைகிறது [1][2].

பொதுவாக இலந்தனம் கோபால்டைட்டு ஒரு மாசுப்பொருளாக அல்லது விகிதச்சமமில்லா ஆக்சிசன் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு La1−xA'xCo1−yB'yO3±𝛿 என்ற கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்கிறது. கட்டமைப்பில் உள்ள 𝛿 சில சிறிய அளவைக் குறிக்கிறது. இதுவே பெரோவ்சிகைட்டுகளை பன்முக வினையூக்கியாக மாற்றம் செய்கிறது [3]. இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட் பெரைட்டு இவ்வாறு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரோவ்சிகைட்டு பொருளாகும்.

மேற்கோள்கள்

தொகு