இலலிதா வெங்கட்ராம்
இலலிதா வெங்கட்ராம் (Lalita Venkatram-1909 – 1992), என்பவர் ஓர் இந்தியக் கருநாடக இசைப் பாடகரும் வீணை இசைக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ்த்திரைப்பட முதல் பின்னணிப் பாடகியும் மும்பையில் உள்ள அனைத்திந்திய வானொலியின் முதல் இசைக் கலைஞரும் ஆவார்.[1]
இலலிதா வெங்கட்ராம் | |
---|---|
பிறப்பு | 1909 திருவண்ணாமலை, தமிழ்நாடு |
இறப்பு | 1992 |
பணி | பாடகர், இசை ஆசிரியர் |
இளமை
தொகுஇலலிதா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில், மணவாசி வி. இராமசுவாமி ஐயர் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.[1][2]
தொழில்
தொகுஇலலிதா இந்தியாவிலும் இலங்கையிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினார். 1935 குவெட்டா பூகம்பத்திற்குப் பிறகு இவர் கொழும்பில் ஒரு நிதியுதவிக்காக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.[3] மும்பை அனைத்திந்திய வானொலியின் முதல் கருநாடகப் பாடகி என்ற பெருமையினை இவர் பெற்றார். ஏனெனில் இவர் 1933-இல் இந்த நிலையத்தின் முதல் ஒலிபரப்பில் பாடினார்.[1] ஆவிச்சி மெய்யப்பனின் நந்தகுமார் (1938) திரைப்படத்தில் நடிகை ஒருவருக்காகப் பாடல் ஒன்றைப் பாடினார்.[4] இதன் மூலம் தமிழ்த் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகி ஆனார்.[1] இவர் 1940களின் பிற்பகுதி வரை அனைத்திந்திய வானொலியின் இசைக் கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார்.[5][6][7]
இலலிதா இசை நிகழ்ச்சியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மும்பையில் இசை மாணவர்களுக்குக் கற்பித்தார்.[1] இவரது சிறந்த மாணவர்களில் ஒருவர் பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் ஆவார்.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகே. எஸ். வெங்கட்ராம் என்பவரை மணந்தார். இலலிதா மும்பையில் வசித்து வந்தார். பாடகி கல்யாணி இராமதாசு உட்பட ஐந்து குழந்தைகள் இந்த இணையருக்கு இருந்தனர். இவரது பேரக்குழந்தைகளில் ஒருவரான கிருஷ்ணா ராம்தாசு தொழில்முறை கைம்முரசு இணை கலைஞர்.[9] இலலிதா 1992-இல் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sriram, Krishnan. "The First Playback Voice of Tamil Cinema". The Verandah Club (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.Sriram, Krishnan. "The First Playback Voice of Tamil Cinema". The Verandah Club. Retrieved 2021-11-21.
- ↑ "The Making of the Saranagati Song". Arunachala Ashrama, The Archives. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "Mrs. Lalita Venkatram". https://archive.org/details/dli.granth.12061/page/n3/mode/2up?q=Lalita+Venkatram.
- ↑ Kumar, S. r Ashok. "Chronicling the life of movie mogul AV Meiyappan" (in en-IN). https://www.thehindu.com/entertainment/movies/chronicling-the-life-of-movie-mogul-av-meiyappan/article32173768.ece.
- ↑ "Grand Variety Entertainment". https://archive.org/details/dli.granth.13533/page/30/mode/2up?q=Lalita+Venkatram.
- ↑ "Andhra Mahasabha Celebrations". https://archive.org/details/dli.granth.11372/page/1/mode/2up?q=Lalita+Venkatram.
- ↑ The Indian Listener: Vol. XIII. No. 15: Madras 1 (in ஆங்கிலம்).
- ↑ "Shankar Mahadevan". Kennedy Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "Krishna Ramdas TABLA". Krishna Ramdas TABLA. Archived from the original on 2021-11-21. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
வெளி இணைப்புகள்
தொகு- லலிதா வெங்கட்ராம் பாடும் பதிவு, யூடியூப்பில்