இலவுயிசே து பியேரி
இலவுயிசே து பியேரி (Louise du Pierry) அல்லது எலிசபெத் இலவுயிசே பெலிசிதே பவுரா தெ லா மாதெலைன் எனப்படும் துப்பியேரி [1] (30 ஜூலை 1746 – 27 பிப்ரவரி 1807) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் பேராசிரியரும் ஆவார்.
வாழ்க்கை
தொகுஇவர் இலா பிரெத்தே பெர்னர்டில் பிறந்தார்.[2]
இலவுயிசே து பியேரி 1779 இல் [[ஜெரோம் தெ இலாலண்டே வின் மாணவர். இவர் Académie des Sciences de Béziers எனும் பேசியர்சு அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் 1789 இல் பாரீசில் உள்ள சோர்போன்னி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் ஆனார். பெண் மாணவருக்கான Cours d’astronomie ouvert pour les dames et mis à leur portée எனும் பாடத் திட்ட்த்துக்குத் தலைவர் ஆவார். முதலில் இப்பாடத்திட்டம் மகளிருக்கு மிகவும் அரிதாகவிருக்கும் எனக் கருதப்பட்டாலும், நடப்பில் இது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.[3] இவர் கடந்த நூற்றாண்டின் வரலாற்றுத் தரவுகளைத் திரட்டி ஒளிமறைப்புகளை முன்கணித்தார். இவர் இரவு, பகல் நேர நெடுக்க அட்டவணைகளை கணக்கிட்டார்; பாரீசு நகர அகலாங்குக்கான வல ஏற்றம், இறக்கம் சார்ந்த ஒளிவிலகல் பட்டியல்களை உருவாக்கினார்.[3] இவர் தன் பணியை 1799 இல் வெளியிட்டார்.
மகளிருக்கான வானியல் (Astronomie des Dames) எனும் நூலை ஜெரோம் தெ இலாலண்டே (1790),[4] அறிவியலில் பியேரி காட்டிய திறமை, ஆர்வம், உரம் ஆகியவற்றுக்காக இவருக்கு காணிக்கை ஆக்கினார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Chronology of women's history by Kirstin Olsen
- "Astronomes françaises du siècle des lumières à l'ère spatiale", calendar with short biographies (French)
- ↑ வார்ப்புரு:Fr-icon Jean Pierre Poirier, Histoire des femmes de science en France: du Moyen-Âge à la Révolution. Pygmalion, 2002, p. 161 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782857047896
- ↑ https://books.google.com/books?id=G-a9CwAAQBAJ&pg=PA131&lpg=PA131&dq=1746+france+louise+pierry+birth+OR+born&source=bl&ots=KIny8wdMSp&sig=ax0_wSa6XIpNFTzRENZ__gpITBE&hl=en&sa=X&ved=0ahUKEwjO6vHjz7fOAhUE3WMKHd5SDiYQ6AEITzAK#v=onepage&q=1746%20france%20louise%20pierry%20birth%20OR%20born&f=false
- ↑ 3.0 3.1 Ogilvie, Marilyn Bailey (1986). Women in Science: antiquity through the nineteenth century. Boston: Massachusetts Institute of Technology. p. 148.
- ↑ Astronomie des dames, p. 6 (1817)