இலாகூர் அறிவுப் பூங்கா
இலாகூர் அறிவுப் பூங்கா (Lahore High Court) என்பது பாக்கித்தான் நாட்டின் இலாகூர் மாவட்டத்தில் உள்ள பெடியன் சாலையில் 852 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானத்தின் கீழ் உள்ள ஓர் அறிவியல் பூங்காவாகும். [1] [2] [3]
1 பில்லியன் டாலர் ஆரம்ப முதலீட்டில் லாகூர் அறிவியல் பூங்கா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இதில் $200 மில்லியன் பஞ்சாப் அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை புரோசுட்டு & சல்லிவன் என்ற அமெரிக்க நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர். பூங்காவில் பல்கலைக்கழகங்கள், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள், சில்லறை மற்றும் மத்திய வணிக மாவட்டம், குடியிருப்பு மாவட்டம், பொழுதுபோக்கு மண்டலம் மற்றும் பசுமைப் பகுதிகள் ஆகியவை உள்ளன. [4]
பாக்கித்தான் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் இப்பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது. [5]
மூலத் திட்டம்
தொகுபூங்காவின் மூலத் திட்டம் இதை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறது: [6]
- வாழ்க்கை அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்,
- வடிவமைப்பு மற்றும் படைப்புத் தொழில்,
- தகவல் தொழில்நுட்பம்,
- கணினி அறிவியல்
- அறிவியல் மற்றும் பொறியியல்
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இசுலாமாபாத்து நகரத்திலுள்ள் காசுமோட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இலான்காசுட்டர் பல்கலைக்கழகம் இணைந்து பூங்காவில் ஒரு பட்டதாரி பள்ளியை அமைக்கும். [7] [8] [9] தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் அதன் வளாகத்தை பூங்காவிற்கு மாற்றும். [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lahore Knowledge Park | HIGHER EDUCATION DEPARTMENT". பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
- ↑ "Lahore Knowledge Park master plan approved". பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
- ↑ "Cosmopolitan effect: Knowledge Park to attract international universities - The Express Tribune". http://tribune.com.pk/story/1310012/cosmopolitan-effect-knowledge-park-attract-international-universities/.
- ↑ "A billion dollar project, Lahore Knowledge Park, to produce 11,200 PhDs" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
- ↑ "CEO LKP talks about creation of a knowledge park in Lahore". பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
- ↑ "Looking beyond infrastructure, Punjab builds knowledge park - The Express Tribune" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-07-24. பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
- ↑ "Lahore Knowledge Park Company".
- ↑ "Pacts for Lahore Knowledge Park".
- ↑ "CEO LKP talks about creation of a knowledge park in Lahore".
- ↑ "Sharif reviews Lahore Knowledge Park Project".