இலாரிசாவின் பிலோ

பிலோ (Philo, கிரேக்க மொழி: Φίλων பிலோன்; கிமு. 154/3 – 84/3[1]) இலாரிசா நகரத்தைச் சேர்ந்த கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கிளிட்டோமாக்கசு என்பவரின் மாணவர். அவருக்குப் பிறகு இவர் பிளாட்டோனியக் கல்விக்கழகத்தின் தலைமையேற்றார். அக்கல்விக்கழகத்தை அழித்த முதல் மித்ரிதாடிகப் போரின் போது இவர் உரோமுக்குப் பயணமானார். அங்கு இவரது விரிவுரைகளைச் சிசெரோ கேட்டார் எனக் கூறப்படுகிறது. இவரது எழுத்துகள் ஏதும் கிடைக்கவில்லை. இவர் கல்விக்கழக ஐயுறவுவாதி. இவருக்கு முன்பிருந்த கிளிட்டோமாக்கசையும் கார்னியாடெசையும் போல இவரும் வாழ்வோடு சமனமான ஐயுறவுவாதக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். உறுதியற்ற நடைமுறை நம்பிக்கைகளுக்கு இசைவு தந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. Tiziano Dorandi, Chapter 2: Chronology, in Algra et al. (1999), The Cambridge History of Hellenistic Philosophy, page 48. Cambridge.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாரிசாவின்_பிலோ&oldid=4025232" இலிருந்து மீள்விக்கப்பட்டது