இலால்குலி அருவி

கருநாடக அருவி

இலால்குலி அருவி (Lalguli falls) என்பது இந்தியாவின் கர்நாடகா, வடகன்னட மாவட்டத்தில் உள்ள யெல்லாபூரில் இருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது அருகிலுள்ள இலால்குலி கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அருவிக்கு நீரானது காளி ஆற்றிலிருந்து வருகிறது. சுமார் 250 அடி உயரம் கொண்ட காடுகளின் உள்ளே அடுக்கருவியாக விழுகிறது.[1] அக்டோபர் முதல் திசம்பர் வரையிலான காலகட்டம் அருவியினை பார்வையிடச் சிறந்த காலமாக இருக்கும். கோடைக்காலத்தில் அருவி வறண்டு காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lalguli falls". discover india. discover india. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்குலி_அருவி&oldid=3785643" இலிருந்து மீள்விக்கப்பட்டது