இலா பட்
இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்
இலா பட் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். சேவா (SEWA - Self-Employed Women's Association of India) என்ற பெண்களுக்கான சேவை அமைப்பை உருவாக்கியவர். இவர் தமது சமூக சேவைகளுக்காக 1977 ஆம் ஆண்டு சமூகத் தலைமை பிரிவில் ரமோன் மக்சேசே விருது பெற்றார். அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் (Rockefeller Foundation) அறங்காவலர்களில் ஒருவராகவும் உள்ளார்.
பணிகள்
தொகு1979 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பெண்களுக்கான உலக வங்கி நிறுவனர்களில் ஒருவர்.
பரிசுகள்
தொகுஇவர் தமது சமூக சேவைக்காக பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விருதுகளை பெற்றுள்ளார்.
- இந்திரா காந்தி அமைதி விருது - 2011
- ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் - 2001
- பத்ம பூசன் விருது - 1986
- பத்மஸ்ரீ விருது - 1985