இலிசுகிர்சுனரைட்டு

நைட்ரேட்டு கனிமம்

இலிசுகிர்சுனரைட்டு (Lislkirchnerite) என்பது Pb6Al(OH)8Cl2(NO3)5•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நைட்ரேட்டு [2]வகை கனிமமான இது ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. அர்கெந்தினா நாட்டின் கேட்டமார்கா மாகாணத்தில் கேபிலிடாசு படிவுகளில் உள்ள நுவா எசுபெரான்சா எண். 1 சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

இலிசுகிர்சுனரைட்டு
Lislkirchnerite
பொதுவானாவை
வகைநைட்ரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுPb6Al(OH)8Cl2(NO3)5•2H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1]

இலிசுகிர்சுனரைட்டு கனிமம் ஈயம் மற்றும் நைட்ரேட்டைக் கொண்ட முதல் கனிமமாகும்.[2][3] கனிமத்தின் கட்டமைப்பும் தனித்துவமானதாகும்.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலிசுகிர்சுனரைட்டு கனிமத்தை Lcn[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Effenberger, H., Lengauer, C.L., Libowitzky, E., Putz, H., and Topa, D., 2015. Lislkirchnerite, IMA 2015-064. CNMNC Newsletter No. 27, October 2015, 1230; Mineralogical Magazine 79, 1229–1236
  2. 2.0 2.1 "Lislkirchnerite: Lislkirchnerite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  3. "[International Mineralogical Association] : List of Minerals - IMA". Ima-mineralogy.org. 21 March 2011. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசுகிர்சுனரைட்டு&oldid=4131613" இலிருந்து மீள்விக்கப்பட்டது