இலிசு மெக்டொனால்டு

எலிசபெத் (இலிசு) மெக்டொனால்டு (Elizabeth (Liz) MacDonald) ஓர் அமெரிக்க விண்வெளி வானிலை அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரிகிறார். இவர் எல்லியம், உயிரகம், முதன்மி, மின்னன் கதிர்நிரல் அளவி வழியாக நாசாவில் வான் ஆலன் ஆய்கலங்கள் (கதிர்வீச்சுப் பட்டை ஆய்வுத்) திட்ட இணை ஆய்வாளர் ஆவார்.

இலிசு மெக்டொனால்டு
Liz MacDonald
பணியிடங்கள்இலாசு அலமாசு தேசிய ஆய்வகம் கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்நியூகாம்ப்சயர் பல்கலைக்கழகம் வாழ்சிங்டன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅரோராசாரசு

கல்வி

தொகு

இவர் அலைசு மெக்டொனால்டுக்கும் வால்லா வால்லன்சு பில்லுக்கும் மகளாகப் பிறந்தார்.[1] இவர் நாசாவின் விண்வெளி ஆய்வு நல்கை பெற்று வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் 1999 இல் பெற்றார்.[2] இவரது வழிகட்டியான உரூது சுகவுகு ஆய்வில் தொடரும்படி ஊக்கப்படுத்தினார்.[3] இவர் நியூகாம்ப்சயர் பல்கலைக்க்ழகத்தில் பட்டமேற் படிப்பை முடித்து 2005 இல் முனைவர் பட்டமும் படித்தார்.[4]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் மின்மப் பொருண்மைக் கதிர்நிரல் அளவையியலில் ஆர்வம் கொண்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக அத்துறை சார்ந்த கருவி உருவாக்கம், தரவுப் பகுப்பாய்வு, விளக்கத்திலும் ஈடுபட்ட வல்லுனர் ஆவார்.

முனைவர் பட்டம் முடித்ததும், இவர் இலசு அலமாசு ஆய்வகத்தில் சேர்ந்தார். அந்த ஆய்வகத்தில் இவர் ஆற்றல் துறை சார்ந்த விண்வெளி வளிமண்டல அறிவிக்கை அமைப்புக்கான புவிஒத்தியக்க கருவிகள் திட்டத்தின் இசட்வகை மின்மக் கதிர்நிரல் அளவி ஆய்வில் முதன்மை ஆய்வாளர் ஆவார்.[5] இவர் புத்தாக்க ஆராய்ச்சி, ஒருங்கிணைந்த உணர்தல் குழுவுக்கும் தலைமை தாங்கினார்.[6] She was principal investigator for the Advanced Miniaturized Plasma Spectrometer.[7] இவர் மும்முறை இலாசு அலமாசு விருதுகள் திட்டத்தில் விருது பெற்றுள்ளார்.[8]

மக்கள் பரப்புரை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Eveland, Annie Charnley. "Of celestial ‘glitter bombs’ and scientific research" (in en). Union Bulletin. http://www.union-bulletin.com/local_columnists/etcetera/of-celestial-glitter-bombs-and-scientific-research/article_212bca0c-81e0-11e7-b8b5-77ff9296bcea.html. 
  2. "Bio - Dr. ELIZABETH A MACDONALD". science.gsfc.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  3. "A Physicist Explains The Shimmering Science Behind Auroras - Science Friday" (in en-US). Science Friday. https://www.sciencefriday.com/articles/a-physicist-explains-the-shimmering-science-behind-auroras/. 
  4. "Elizabeth A. MacDonald, CV, 2012" (PDF). LANL. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  5. "archive CSSP Bios Page". sites.nationalacademies.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  6. "IRIS, ISR-1". www.lanl.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  7. MacDonald, E. A.; Funsten, H. O.; Dors, E. E.; Thomsen, M. F.; Janzen, P. H.; Skoug, R. M.; Reeves, G. D.; Steinberg, J. T. et al. (2009-06-01). New Magnetospheric Ion Composition Measurement Techniques. 1144. பக். 168–172. doi:10.1063/1.3169283. http://adsabs.harvard.edu/abs/2009AIPC.1144..168M. 
  8. "Elizabeth MacDonald, AGU Elections" (PDF). American Geophysical Union. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசு_மெக்டொனால்டு&oldid=3961059" இலிருந்து மீள்விக்கப்பட்டது