இலித்துவேனிய தாவரங்கள் மரபணு வங்கி

தாவர மரபணு வளத்தைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பு

இலித்துவேனிய தாவரங்கள் மரபணு வங்கி (Lithuanian Plants Genes Bank) என்பது தாவர மரபணு வளத்தைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பாகும். இது இலித்துவேனியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிர்வகிக்கும் ஒரு நிலையான பயன்பாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பின் தலைமையகம் மத்திய இலித்துவேனியாவின் கேதாய்னியை மாவட்ட நகராட்சியில் இடம்பெற்றுள்ள அகாதெமியா நகரத்தில் அமைந்துள்ளது. [1]

1997 ஆம் ஆண்டு இங்கு தாவரங்கள் சேமிப்புப் பணி செயல்படத் தொடங்கியது. 2004 ஆம் ஆண்டில் இலித்துவேனியத் தாவரங்கள் மரபணு வங்கி நிறுவப்பட்டது. விதை சேமிப்பும் இதன் ஒரு பகுதியாக மாறியது. [2] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இங்கு பல்வேறு வகையான தாவரங்களில் இருந்து 3318 மாதிரிகள் சேமிக்கப்பட்டிருந்தன. [3]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு