இலியூகார்ட்டு தயோபீனால் வினை

இலியூகார்ட்டு தயோபீனால் வினை (Leuckart thiophenol reaction) என்பது ஈரசோசாந்தேட்டின் வேதிச்சிதைவு வினையைக் குறிக்கிறது. இவ்வினையில் சற்று அமிலத்தன்மை கொண்ட குப்ரசு எனப்படும் தாமிர(I) ஆக்சைடு ஊடகத்தில் ஈரசோசாந்தேட்டை மிதமாக சூடாக்கப்படும்போது இச்சிதைவு வினை நிகழ்கிறது. உருவாகும் தொடர்புடைய அரைல் சாந்தேட்டு கார நீராற்பகுப்பின் போது அரைல் தயோல்களையும், மேலும் சூடாக்கும் போது அரைல் தயோ ஈதர்களையும் கொடுக்கிறது.

வினை தடமும் வினைவழி முறையும்

1890 ஆம் ஆண்டு முதன்முதலாக இவ்வினையை ருடால்ப் இலியூகார்ட்டு கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்[1][2][3]

.

மேற்கோள்கள்

தொகு
  1. Leuckart, Rudolf (30 December 1889). "Eine neue Methode zur Darstellung aromatischer Mercaptane". Journal für Praktische Chemie 41 (1): 179–224. doi:10.1002/prac.18900410114. 
  2. Fukushima, D. K.; Tarbell, D. S. (1947). "m-THIOCRESOL". Organic Syntheses 27: 81. doi:10.15227/orgsyn.027.0081. 
  3. Merck Index 14th Ed.

.