இலியூ கோங் (Liu Hong, கி.பி. 129 – கி.பி. 210), அல்லது யுவான்சுவோ ஒரு சீன வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் சீன மூவேந்தர் காலத்தில் வழக்கில் இருந்த நிலாச் செலவைக் கணிக்கும் முறையை உருவாக்கினார்.

வானியல்

தொகு

இவர் தைழ்சான் பகுதியில் (இன்றைய மெங்கியின் நாடு, சாந்தோங் மாகாணம்) பிறந்தார். இவர் கிழக்கு ஆன் அரசமரபைச் சார்ந்த இளவரசர் இலூ கால்வழியில் வந்த இலியூ யூ குடும்பத்தில் வளர்ந்தார். இலியூ இளம்பருவத்திலேயே வானியலில் ஆர்வமுடன் வளர்ந்தார். இவர் கி.பி 160 இல் பேரரசு வானியல் அமைப்பில் அலுவலராக அமர்த்தப்பட்டார். இது இவர் இழந்த நூல்களான குவி யாவோ சூ (Qi Yao Shu) (ஏழு கோளியல்), பா யாவுன் சூ (Ba Yaun Shu) (எட்டுத் தனிமவியல்) ஆகிய நூல்க்களை எழுத வழிவகுத்த்து.[1] After the death of his father, Liu retired for a short time but returned to his work, collaborating with Cai Yong on the Qian Xiang Li (Qian Xiang Calendar),[2] இந்நிலை அக்காலத்தில் மிக வளர்ந்த அறிவு வாய்ந்த்தாக விளங்கியதால், உடனே சீனப் பேரரசு இதைப் பின்பற்றியது. இந்த நாட்காட்டி முத்ன்முதலாக சீனாவில் நிலா இயக்கத்தை முன்கணித்தது.[1] இந்த முறை மூன்று வான்பொருள்களின் இடையிலான கணக்கீட்டைச் செய்யும் வழிமுறையான பெரியாப்சிசு விவாதத்தை முதன்முதலாகத் தோற்றுவித்தது. இது பருவந்தோறும் நிலா இயக்கத்தைக் கட்டமைத்தது.[3] நாட்காட்டியின் துல்லியத்தை நிறுவும் இவரது முறை ஒளிமறைப்புகளின் கண்டுபிடிப்பால் ஏற்பட்டதாகும்.[4]

இது ஏற்கெனவே ஃஏன் பேரரசு கி.பி 85 முதல் பின்பற்றிய பழைய முறையைப் பதிலீடு செய்தது. மூவேந்தர்கால இந்தச் சீன முயற்சி சீனா ஒற்றுமைபெற்ற யின் பேரரசு காலம் (கி.பி 265-கி.பி 420) வரை பின்பற்றப்பட்டது .[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Selin, Helaine, ed. (1997). Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures. Boston: Kluwer Academic. p. 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780792340669.
  2. De Crespigny, Rafe (2007). A Biographical Dictionary of Later Han to the Three Kingdoms (23-220 AD). Boston: Leiden. p. 510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9047411846.
  3. Zhang, Qizhi (2015). An Introduction to Chinese History and Culture. New York: Heidelberg. p. 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662464823.
  4. Lingfeng, Lü (2007). "Eclipses and the Victory of European Astronomy in China". East Asian Science, Technology, and Medicine (27): 127. 
  5. North, John (2008). Cosmos: An Illustrated History of Astronomy and Cosmology. Chicago: University of Chicago Press. pp. 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226594408.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியூ_கோங்&oldid=4171136" இலிருந்து மீள்விக்கப்பட்டது