இலியோனித் இலேனின்
இலியோனித் விளாதிமிரோவிச் இலேனின் (Leonid Vladimirovich Elenin, உருசியம்: Леони́д Влади́мирович Еле́нин; பிறப்பு: 10 ஆகத்து 1981) உருசிய பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் குறுங்கோள் காணும் வான்காணகமான மேகில் மலையில் அமைந்த SON-NM வான்காணகத்தில் நோக்கீட்டு விதிமுறைகள் #H00-H99|H15 ஆகியவற்றைப் பின்பற்றிப் பன்னாட்டு அறிவியல்சார் ஒளியியல் வலையமைப்பு வாயிலாக இணைந்து பணிபுரிந்தார். இது உருசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த முதல் தொலைவிட நோக்கீட்டு வான்காணகம் ஆகும்.
இலியோனித் இலேனின் | |
---|---|
பிறப்பு | 10 ஆகத்து 1981 (அகவை 43) |
பணி | வானியல் வல்லுநர் |
வேலை வழங்குபவர் |
|
இணையம் | http://spaceobs.org/ru |
இவர் கெடிழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனத்துக்காகப் பணிபுரிகிறார்.[1] இவர் உருசியாவில் இலியூபெர்த்சி எனும் மாஸ்கோ பகுதியில் வாழ்கிறார்.[2]
இவர் 2010 திசம்பர் 10 இல் சி/2010 எக்சு1 என்ற வால்வெள்ளியைக் கண்டுபிடித்துப் புகழ்பெற்றார்.[2] பின்னர், இவர் 2011 சூலை 7 இல் பி/2011 NO1 எனும் வால்வெள்ளியையும் கண்டுபிடித்தார்.[3]
இவர் 2008 திசம்பர் 1 இல் முதன்முதலாக 2008 XE எனும் குறுங்கோளை திசெக் (Tzec) #H00-H99|H10 எனும் நோக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றிக் கண்டுபிடித்தார்.[4] இவர் முதல் அமோர் குறுங்கோளாகிய (புவியண்மைக் குறுங்கோள்) 2010 RN80 ஐ 2010 செப்டம்பர் 10 இல் ISON-NM (H15) நோக்கீட்டு விதிமுறைகளின்படிக் கண்டுபிடித்தார்.[5]
இவர் 2011 ஆகத்து 23 இல் வியாழனைப் பின்பற்றும் L5 வியாழன் திரொழான் ஆகிய 2011 QJ9ஐக் கண்டுபிடித்தார்.[6] மேலும் இவர் செவ்வாயைக் கடக்கும் குறுங்கோளாகிய2011 QD23ஐ 2011 ஆகத்து 25 இல் கண்டுபிடித்தார்.[7] அதேபோல புவியண்மை வான்பொருளான குறுங்கோள் 2011 QY37 ஐ 2011 ஆகத்து 27 இல் கண்டுபிடித்தார்.[8] இவர் கண்டுபிடித்த எண்ணிட்ட முதல் ISON-NM குறுங்கோள் 365756 ISON (2010 WZ71) ஆகும்.[9]
இவருக்கு 2013 ஜனவரி 29 இல் சிறுகோள் மையம் பயில்நிலை வானியலாருக்கு வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான எட்கார் வில்சன் விருதை வழங்கியது.[10]
216439 இலியூபெர்த்சி | 15 மார்ச்சு 2009 | 216439 |
(239664) 2008 XE{{{2}}} | 1 திசம்பர் 2008 | 239664 |
257261 அவச்கின் | 31 மார்ச்சு 2009 | 257261 |
269390இகோர்த்காசெங்கோ | 27ஆகத்து 2009 | 269390 |
(296345) 2009 FR4 | 19 மார்ச்சு 2009 | 296345 |
(296563) 2009 QS35 | 29 ஆகத்து 2009 | 296563 |
(301522) 2009 FX23 | 22 மார்ச்சு 2009 | 301522 |
365756 இசோன் | 4 நவம்பர் 2010 | 365756 |
(369485) 2010 UP6 | 16 அக்தோபர் 2010 | 369485 |
(372562) 2009 UN20 | 25 அக்தோபர் 2009 | 372562 |
382238 இயூபெமசு | 8 ஜூலை 2011 | 382238 |
(400697) 2009 RV4 | 15 செப்டம்பர் 2009 | 400697 |
(425381) 2010 CB44 | 13 பிப்ரவரி 2010 | 425381 |
(429070) 2009 HR67 | 27 ஏப்பிரல் 2009 | 429070 |
(471002) 2009 SN170 | 27 செப்டம்பர் 2009 | 471002 |
2016 இல் சிறுகோள் மையம் அறிவிப்பின்படி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Астрономы обнаружили в спектре "российской" кометы Еленина следы синильной кислоты". 7 August 2011. பார்க்கப்பட்ட நாள் September 8, 2011.
- ↑ 2.0 2.1 "IAUC 9189: C/2010 X1; P/2010 V1". IAU Central Bureau for Astronomical Telegrams. 2010-12-17. பார்க்கப்பட்ட நாள் 2011-03-15.
- ↑ "MPEC 2011-O09 : 2011 NO1". IAU Minor Planet Center. 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
- ↑ "JPL Small-Body Database Browser: 239664 (2008 XE)" (2010-04-09 last obs). பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ Elenin, Leonid (2010-09-13). "The first near-Earth asteroid of ISON-NM observatory". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ Elenin, Leonid (2011-08-31). "The first Jovian trojan has been discovered at the ISON-NM observatory". பார்க்கப்பட்ட நாள் 2011-09-05.
- ↑ "MPEC 2011-Q39 : 2011 QD23". IAU Minor Planet Center. 2011-08-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-05.
- ↑ "MPEC 2011-Q51 : 2011 QY37". IAU Minor Planet Center. 2011-08-29. பார்க்கப்பட்ட நாள் 2011-09-05.
- ↑ "JPL Small-Body Database Browser: 365756 (2010 WZ71)" (2013-06-04 last obs). பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
- ↑ "2012 Comet Awards Announced". January 29, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.