இலெடிசியா தோரசு
இலெடிசியா தோரசு (Leticia Torres) இவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக வகை டி52 வகை விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார்.
இவர் மொத்தம் ஐந்து இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டு பதின்மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். 1988 ஆம் ஆண்டில் இவரது முதல் ஆட்டங்கள் 100 மீ, 200 மீ, 400 மீ 800 மீ. ஆகியவற்றில் தங்கத்தை வென்றுள்ளார். மேலும் 1500 மீட்டர் ஓட்டத்தில் மேற்கு ஜெர்மனியின் யோலண்டே ஹேன்சனிடம் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1992 இல் தனது அடுத்த ஆட்டங்களில் இவர் 100 மீ, 200 மீ, 400 மீட்டர் ஓட்டங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். ஆனால் 800 மீ. ஓட்டாத்தில் வெற்றி பெறவில்லை. 1996 கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 400 மீட்டரில் வெண்கலமும் வென்றார். ஆனால் 800 மீ. ஓட்டத்தில் வெல்லத் தவறினார். 2000 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் 200 மீ, 400 மீ, 800 மீ ,1500 மீட்டர் ஓட்டங்களில் பதக்கம் வெல்லத் தவறியதால் ஒரு குறைந்த புள்ளியையேப் பெற முடிந்தது. இவர் 2004 கோடைகால இணை ஒலிம்பிக்கிற்கு திரும்பினார். அதில் இவர் இணை ஒலிம்பிக்கில் வட்டு எறிதலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் 200 மீ மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். [1]