இளங்கோ அடிகள் சமயம் எது? (நூல்)

இளங்கோ அடிகள் சமயம் எது? என்பது அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலை கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

இளங்கோ அடிகள் சமயம் எது? நூல் அட்டை
நூல் பெயர்:இளங்கோ அடிகள் சமயம் எது? நூல் அட்டை
ஆசிரியர்(கள்):அ. ச. ஞானசம்பந்தன்
வகை:ஆய்வு, சைவ சமயம்
காலம்:ஏப்ரல் 1996
மொழி:தமிழ்
பக்கங்கள்:158
பதிப்பகர்:கங்கை புத்தக நிலையம்

உள்ளடக்கங்கள்

தொகு
  • இளங்கோ அடிகள் சமயம் எது
  • இளங்கோ கண்ட ஊழ்
  • ஒரே பிறப்பில் வீடு
  • கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்
  • இளங்கோவும் திருவள்ளுவரும்

இளங்கோ அடிகள் சமயம் எது

தொகு

இப்பகுதியில் இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும், ஜைன சமயத்தினை சார்ந்தவன் என்பதையும் மறுத்து ஆசிரியர் கூறுகிறார். இறுதியாக இளங்கோவடிகள் வேறு எம்மதத்தினை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உறுதியாக ஜைன சமயத்தினை சார்ந்தவர் இல்லை என்கிறார்.

இளங்கோ கண்ட ஊழ்

தொகு

ஊழ் எனும் வினையைப் பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கும் பகுதிகளை ஆய்வு செய்து கூறியுள்ளார்.

ஒரே பிறப்பில் வீடு

தொகு

சிலப்பதிகார காவியத்தலைவியான கண்ணகியின் வளர்ச்சியை சைவ, வைணவ நெறிகளின் அடிப்படையில் ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்

தொகு

சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியையும், பெரியபுராணத்தில் வருகின்ற மூன்று பெண்களில் முதியவரான காரைக்கால் அம்மையாரையும் ஒப்பிட்டு இப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர்

இளங்கோவும் திருவள்ளுவரும்

தொகு

நீதி நூலை எழுதிய திருவள்ளுவரையும், காப்பியம் எழுதிய இளங்கோவையும் இப்பகுதியில் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இவற்றையும் காண்க

தொகு
  1. ஐம்பெருங் காப்பியங்கள்
  2. சைவ சமய இலக்கியங்கள்
  3. தமிழாய்வு நூல்கள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இளங்கோ அடிகள் சமயம் எது