இளசை மணியன்

இளசை மணியன் (இயற்பெயர்:மு. இராமசுப்பிரமணியன்) (பிறப்பு:1942-மறைவு:2020) இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் பாரதி ஆய்வாளர் ஆவார். இவர் பாரதி ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, வரலாற்று ஆய்வு, கதை, கவிதை, மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் பிறந்த இவர் பாரதி நினைவு இல்லத்தின் காப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.[1] பாரதி மீது கொண்ட பற்றால் இவர் இளசை மணியன் என்ற பெயரில் பாரதி ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

படைப்புகள்

தொகு

பாரதி மீது கொண்ட பற்றால் இவர் இளசை மணியன் என்ற பெயரில் பாரதி ஆய்வு மேற்கொண்டு வந்தார். இவரது சில படைப்புகள்:

  • பாரதி தரிசனம் ( 2 பாகங்கள்)
  • பாரதியும் மத நல்லிணக்கமும்
  • பாரதியும் சோசலிசமும்
  • பாரதியும் ரஷ்யப் புரட்சியும்
  • பாரதியாரின் இந்தியா
  • பென்ஷன் (சிறுகதைத் தொகுப்பு)
  • எட்டயபுரம் வரலாறு

மறைவு

தொகு

இளசை மணியன் மூச்சுத் திணறல் காரணமாக திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சூலை 2020ஆம் ஆண்டில் காலமானார். [2][3]

பாரதி நூற்றாண்டு நினைவு விருது

தொகு

பாரதி ஆய்வாளர்களில் ஒருவரான இளசை மணியன் மறைவிற்குப் பின் டிசம்பர் 2021ல் தமிழக அரசு, பாரதி ஆய்வாளர்கள் விருது 6 பேருக்கு வழங்கிது. 6 பேரில் இளசை மணியனும் ஒருவர். இவர் 2020ல் மறைந்து விட்டதால், இவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு மூன்று இலட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளசை_மணியன்&oldid=4097322" இலிருந்து மீள்விக்கப்பட்டது