இளநிலை மின் பொறியியல்

இளநிலை மின் பொறியியல் ( Bachelor of Electrical Engineering சுருக்கமாக BEE ) என்பது ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் மின்பொறியியலில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்த மாணவருக்கு வழங்கப்படும் இளநிலைப் பட்டம் ஆகும்.

பல கல்வி நிறுவனங்கள் மின் பொறியியல் ( BSEE அல்லது B.Sc.EE ) அல்லது இளம் அறிவியல் மின் பொறியியல் ( BEEE) படிப்புகளை வழங்குகின்றன.[1]

கால அளவு

தொகு

நாடுகளின் பாடத்திட்டத்தினைப் பொறுத்து இதன் கால அளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், இந்தப் படிப்பை முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும்.ஆனால், இங்கிலாந்தில் மூன்று ஆண்டுகள் ஆகும்.

சில நாடுகளில், இதை முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும். நேர் மின்னோட்டம், மாறுதிசை மின்னோட்டம், மின் இயந்திரங்கள், மாறுதிசை மின்சார இயக்கி & டிசி மின்சார இயக்கி, மின்மாற்றி, மின்னியற்றி, சுழலும் சாதனங்கள், மின் பொறியியல், மின்திறன் செலுத்தல் மற்றும் மின் வழங்கல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் பொதுவாக உள்ளடக்கப்படும் ஆய்வுத் தலைப்புகள் ஆகும்.

சான்றுகள்

தொகு
  1. "Top Electrical Engineering Colleges in Tamil Nadu".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளநிலை_மின்_பொறியியல்&oldid=3840002" இலிருந்து மீள்விக்கப்பட்டது