இளநீர் (Coconut water) என்பது தேங்காய்க்குள் உள்ள தெளிவான திரவமாகும். தேங்காயை தென்னங் குருத்தின் பழம் என்பர். தேங்காய் நீர், தேங்காய் சாறு என்ற பெயர்களாலும் இளநீர் அழைக்கப்படுகிறது. தேங்காய் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் அணுக்கரு நிலை வளர்ச்சியின் போது எண்டோசுபெர்ம் எனப்படும் விதை திசுவாக தென்னங் குருத்து செயல்படுகிறது. விதை திசு மெல்ல மெல்ல வளரும் விதமாக உயிரணு நிலைக்குச் சென்று தேங்காய் கூழின் தோல் பகுதியில் படிகிறது. இளம் தேங்காய்களுக்குள் இருக்கும் நீர்மம் பெரும்பாலும் பழுத்த தேங்காயின் நீர்மம் என்று அழைக்கப்படவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இளநீர்
சூரிய செவ்விளநீர் தேங்காய்

அறுவடை

தொகு

புதிய தேங்காய்கள் பொதுவாக மரத்திலிருந்து பச்சை நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகின்றன. தேங்காயில் ஒரு துளையிட்டு அதனுள்ளே இருக்கும் நீர்மம் மற்றும் கூழை எடுத்துப் பயன்படுத்தலாம். இளம் தேங்காய்களில் உள்ளிருக்கும் திரவமும் காற்றும் ஒருவிதமான அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும்போது உள் தோல் முதலில் துளையிடப்பட்டால் சிறிதளவு வேகமாக வெளியே தெளிக்க நேரிடலாம். மரத்திலிருந்து உதிர்ந்து தரையில் விழுந்த தேங்காய்கள் பூச்சிகள் அல்லது பிற விலங்குகளினால் பாதிக்கப்பட்டு அழுகி சேதமடையலாம்.

விளைபொருள்கள்

தொகு

இளநீர் நீண்ட காலமாக வெப்பமண்டல நாடுகளில் பிரபலமான பானமாக இருந்து வருகிறது. அங்கு இது புதியதாக, குவளை அல்லது புட்டிகளில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது.

அருந்துவதற்காகக் கொடுக்கப்படும் தேங்காய்கள் குளிர்ச்சியாகவும், புதியதாகவும், புட்டிகளில் அடைக்கப்பட்ட பானமாகவும் உள்ளன. இளநீர் தேங்காய்கள் பெரும்பாலும் தெரு வியாபாரிகளால் விற்கப்படுகின்றன, அவை வாங்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு முன்னிலையில் வெட்டுக்கத்தி அல்லது ஒத்த கருவிகளைக் கொண்டு இக்காய்கள் துளையிட்டு திறக்கப்படுகின்றன.

சில்லறை விற்பனைக்கான இளநீர் சாதாரண அலுமினிய குவளைகள், நெகிழி குப்பிகளில் வழங்கப்படுகின்றன. சில நேரங்களில் நீர்மத்துடன் தேங்காய் கூழ் அல்லது தேங்காய் வழுக்கையும் கலந்து விற்கப்படுவதுண்டு. தேங்காய் தண்ணீரை நொதிக்க வைத்து தேங்காய் வினீகர் தயாரிக்கப்படுகிறது. மேலும் பாகு போன்ற தேங்காய் உணவு தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஊட்டச்சத்து மதிப்பு

தொகு

100 மில்லிலிட்டர் நீர்மத்தில் 19 கலோரி ஆற்றலை இளநீர் வழங்குகிறது. இளநீரில் 95% நீர் மற்றும் 4% கார்போஹைடரேட்டுகள், புரதம் மற்றும் மொத்த கொழுப்பு 1% ஆகியவை உள்ளடக்கமாக உள்ளன. மேலும் இளநீரில் சிறிய அளவில் வைட்டமின்கள் மற்றும் உணவு தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் சரிவிகித தினசரி உணவில் 10% ஆகும்.

ஆபத்துகள்

தொகு

இளநீரை அதிகமாக உட்கொள்வதால் ஒருசில உடல்நல ஆபத்துகளும் தோன்ற வாய்ப்புள்ளது: இரத்தத்தில் பொட்டாசியம் உப்பின் அளவு அதிகரிக்கும்[1][2]. கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். இதயத்துடிப்பு குறைதல். நனவு இழப்பு மற்றும் இறுதியில் மரணம் போன்றவை ஏற்படலாம்.

பல லிட்டர் இளநீரை உட்கொண்ட பிறகு இதயதுடிப்பு குறைவு மற்றும் நனவு இழப்பு ஆகியவை உடல் உழைப்பைத் தொடர்ந்து ஒரு வணிகப் பொருளாக ஒரு நபர் பயன்படுத்துவதுடன் இணைந்து ஒரு மருத்துவ ஆய்வாக மட்டுமே தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், பதப்படுத்தப்படாத தேங்காய் நீரின் ஒவ்வொரு 100 மில்லி பானத்திலும் உள்ள பொட்டாசியத்தின் அளவு மிகவும் குறிப்பிடத் தக்கதாக ஏதுமில்லை.

வயதானவர்களை கொலை செய்ய தலைக்கூத்தல் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுவதாக விவரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதியோர்களின் தலைக்கு விளக்கெண்ணெயை நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி பின் இளநீரை குடிக்கச் செய்தல் தலைக்கூத்தல் என்ற நடைமுறையாகும். இந்த வழக்கத்தில் வயதான நபர் அதிக இளநீரை குடிக்கச் செய்யப்படுகிறார், இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் இறப்பு ஏற்படுகிறது, ஆனால் அதற்கான சரியான காரணங்கள் தீர்மானிக்கப்படவில்லை.

சந்தை

தொகு

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இளநீர் மேற்கத்திய நாடுகளில் இயற்கையான ஆற்றல் அல்லது குறைந்த அளவு கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் கொண்ட ஒரு விளையாட்டு வீரர் பானமாக விற்பனை செய்யப்படுகிறது[3].

மிகையான விளம்பரங்கள்

தொகு

இளநீருக்கு சுகாதார நன்மைகள் அதிகமுண்டு எனக்கூறும் சந்தைப்படுத்தல் விளம்பரக் கூற்றுக்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் போன்ற சில ஒழுங்குமுறை நிறுவனங்களால் அனுமதிக்கப்படவில்லை[4]. வைரசை தடுக்கும், கொழுப்பைக் குறைக்கும் , இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது போன்ற இளநீர் குறித்த தவறான விளம்பர வாசகங்கள் அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவதில்லை[5].

கம்போடியாவில் மருத்துவப் பயன்பாடு

தொகு

உமிழ்நீருக்காக தேங்காய் தண்ணீரை மாற்றுவது இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும் 1975 முதல் 1979 வரை கம்போடியாவில் கெமர் ரூச் ஆட்சியின் போது இது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது[6][7]. கம்போடியாவின் ஆவண மையம், போல் போட் ஆட்சியின் போது பயிற்சி பெறாத செவிலியர்களை பச்சை தேங்காய் நீரை நிர்வகிக்க அனுமதிப்பதை மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக மேற்கோளிட்டுள்ளது[8].

நாட்டுப்புற மருந்து

தொகு

வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு இளநீர் சமைக்கா போன்ற நாடுகளில் நாட்டுப்புற மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் உள்ளது[9].

மேற்கோள்கள்

தொகு
  1. Rees, Richard; Barnett, Joe; Marks, Daniel; George, Marc (September 2012). "Coconut water-induced hyperkalaemia". British Journal of Hospital Medicine 73 (9): 534. doi:10.12968/hmed.2012.73.9.534. பப்மெட்:23124410. 
  2. Hakimian, J; Goldbarg, SH; Park, CH; Kerwin, TC (2014). "Death by coconut". Circulation: Arrhythmia and Electrophysiology 7: 180–181. doi:10.1161/CIRCEP.113.000941. பப்மெட்:24550410 இம் மூலத்தில் இருந்து 2015-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150523140946/http://circep.ahajournals.org/content/7/1/180.full. 
  3. Martinez-Belkin N (2 December 2014). ""Raw" Coconut Water Under Scrutiny of the FDA". BevNet.com.
  4. Crawford, Elizabeth (October 29, 2014). "Coconut products can never claim to be 'healthy' because of the saturated fats, says legal expert". foodnavigator-usa.com இம் மூலத்தில் இருந்து 10 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160210005755/http://www.foodnavigator-usa.com/Regulation/Coconut-products-can-never-claim-to-be-healthy-because-of-the-saturated-fats-says-legal-expert. பார்த்த நாள்: 31 December 2015. 
  5. "Vita Coco coconut water settles class action lawsuit". Lexology (Manatt Phelps & Phillips LLP). May 27, 2012 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304203233/http://www.lexology.com/library/detail.aspx?g=336d4cf0-efa5-457a-9eee-52d8deeb30da. பார்த்த நாள்: 31 December 2015. 
  6. Barclay, Eliza (15 Aug 2011). "Coconut Water To The Rescue? Parsing The Medical Claims". NPR இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927092400/http://www.npr.org/blogs/health/2011/08/15/139638930/saved-by-the-coconut-water-parsing-coconut-waters-medical-claims. பார்த்த நாள்: 1 Oct 2013. 
  7. Short, Philip (2006). Pol Pot: Anatomy of a Nightmare. New York: Henry Holt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8050-8006-3.
  8. Vilim, Laura (2012). ‘Keeping Them Alive, One Gets Nothing; Killing Them, One Loses Nothing’: Prosecuting Khmer Rouge Medical Practices as Crimes against Humanity. Georgetown University Law Center இம் மூலத்தில் இருந்து 2014-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407103200/http://www.d.dccam.org/Tribunal/Analysis/pdf/Prosecuting_Khmer_Rouge_Medical_Practices_as_Crimes_against_Humanity.pdf. 
  9. Mitchell, SA (2011). "Plants used in Jamaican folk medicine against the common cold, flu and diarrhea". J Antivir Antiretrovir 3 (4): 173 இம் மூலத்தில் இருந்து 2015-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151002032843/http://www.academia.edu/4197383/Plants_used_in_Jamaican_folk_medicine_against_the_common_cold_flu_and_diarrhea. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளநீர்&oldid=3391658" இலிருந்து மீள்விக்கப்பட்டது