இளமை வளையம்

கண் விழி வெண்படலத்தில் கொழுப்புப் பொருள் உட்பரவுதல் இளமை வளையம் எனப்படும்.[1]

இளமை வளையம் உருவாதல் தொகு

கண் விழி வெண்படலத்தில் கொழுப்புப் பொருள் உட்பரவுதலின் போது ஏறத்தாழ ஒரு மில்லி மீட்டர் அகலமுள்ள சாம்பல் வண்ணப் பிறை வடிவ வளைவுகளில் ஒன்று மேலும் மற்றொன்று கீமுமாகத் தோன்றிப் பக்கவாட்டில் இணைந்து கண் விழி வெண்படலத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு வளையத்தை ஏற்படுத்தும். இவ்வளையத்திற்கும் கண் விழி வெண்படலத்திற்கும் இடையே நோயற்ற வெண்படலப் பகுதி இருக்கும்.

குறிப்பு தொகு

  • இளமை வளையம் கண் அமைப்பையோ, பார்வையையோ பாதிப்பதில்லை.
  • இது மிக அரிதாக தோன்றுகிறது.
  • குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அதற்கு இளமை வளையம் என்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு முதுமை வளையம் எனவும் பெயர்.

மேற்கோள்கள் தொகு

  1. "இளமை வளையம்". அறிவியல் களஞ்சியம் (ISBN: 81-7090-160-X) தொகுதி 5. (திருவள்ளுவர் ஆண்டு 2019, ஆடி - சூலை 1988). Ed. பேராசிாியர் கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 26. அணுகப்பட்டது 7 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_வளையம்&oldid=3507241" இலிருந்து மீள்விக்கப்பட்டது