இளவரசி (உணவு)

இளவரசி (உணவு) (ஆங்கில மொழி: Princesses, பல்கேரிய: Принцеси) என்ற பல்கேரிய உணவு இடையீட்டு ரொட்டி வகையாகும். இது அந்நாட்டின் காலை துரித உணவு ஆகும். இது வீட்டில் தயாரிக்கப்படும் போது, ரொட்டித் துண்டுகள் இறைச்சியோடு சேர்த்து நெருப்பின் வாட்டி மொறு மொறுப்பாக செய்யப்படுகிறது. விரைவு உணவாகத் தயாரிக்கப்படும் போது அதிக நேரம் ஆகும். ஏனெனில், முழு ரொட்டியும் திறநிலை கரி அடுப்பின் தீயால் வாட்டப்படுகிறது. இத்துடன் மேற்புறம், மஞ்சள் பாலாடைக் கட்டி (kashkaval) உள்ள இடையீட்டு ரொட்டி யாக உருவாக்கப்படுகிறது. இதற்கு மேல் பூச்சாக மயோனெய்சு, கெட்ச்அப், கடுகு அல்லது 'இலுடெனிகா' (ljutenica) கலந்து, உண்போர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உண்பர்.[2] இதில் மேலும் சில வகைகள் உள்ளன. முட்டையுடனும், 'சைரேனே' (sirene அல்லது ham) கலந்தும் உண்பர்.[3] சுட்ட இறைச்சியையும் (strandjanki) கொண்ட உணவு வகை உள்ளது.[2] இந்த உணவு பல்கேரியா நாட்டுக்கே உரிய உணவு ஆகும். அருகிலுள்ள பிற நாடுகளில் இது இல்லை. 1960களின் இடைக்காலத்தில் இது கண்டறியப்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது.[4][5]

இளவரசி இடையீட்டு ரொட்டி[1], இறைச்சியும், உடன் 'கசுகவல்' (kashkaval)


மேற்கோள்கள் தொகு

  1. https://www.shabdkosh.com/dictionary/english-tamil/sandwich/sandwich-meaning-in-tamil
  2. 2.0 2.1 ""Лъсна истината за бургаската странджанка, вижте я"". flagman.bg. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  3. ""Принцеси с кашкавал"". recepti.gotvach.bg. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  4. ""Princesses – Bulgarian meat sandwiches"". tacoandtiramisu.com. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.
  5. ""Защо наричаме филията с кайма принцеса?"". dariknews.bg. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசி_(உணவு)&oldid=3937860" இலிருந்து மீள்விக்கப்பட்டது