இவான் சீமொனொவ்

இவான் மிகாய்லொவிச் சீமொனொவ் (Ivan Mikhailovich Simonov, உருசியம்: Ива́н Миха́йлович Си́монов, சூலை 1 [யூ.நா. சூன் 20] 1794 –சனவரி 22 [யூ.நா. சனவரி 10] 1855)[1][2] ஓர் உருசிய வனியலாளரும் புவிப்புற அளவையியலாளரும் ஆவார்.

இவான் மீகயீலோவிச் சிமனோவ்
Ivan Mikhailovich Simonov
பிறப்பு(1794-07-01)1 சூலை 1794
கோரகோவெத்சு, உருசியப் பேரரசு
இறப்பு22 சனவரி 1855(1855-01-22) (அகவை 60)
தேசியம்உருசியர்
துறைவானியல்
பணியிடங்கள்கசான் அரசு பல்கலைக்கழகம்

வாழ்க்கை

தொகு

இவர் தன்படிப்பை முடித்துவிட்டு 1816 இல் கசான் அரசு பல்கலைக்கழகப் பேராசிரியரானார்[3] அங்கு இவர் நிகோலாய் உலொபாசெவ்சுகியின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.[2] இவர் 1829 ஆம் ஆண்டுக்குப் பிறகு புனித பீட்டர்சுபர்கு அரசு பல்கலைக்கழக அறிவியல் கல்விக்கழக உயர்நிலை உறுப்பினராக இருந்தார். பின்னர் இவர் 1846 இல் கசான் அரசு பல்கலைக்கழக காப்பாளர் ஆனார்.[1]

இவர் 1819 முதல் 1821 வரை எஃப். எஃப். பெல்லிங்காசன், எம். பி. இலாசரேவ் ஆகிய இருவரின் உலகம் சுற்றிவந்த தேட்ட்த்தின் விவரங்களை எழுதித் தொகுத்தார். அப்பயணத்தில் தான் அண்டார்ட்டிகா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது பங்களிப்புகலாக வானியல் நோக்கீடுகளும் அந்நோக்கீடுகளுக்கான முறைகளை உருவாக்கியதும் ஓர் எதிர்த்தெறிப்பியை வடிவமைத்து உருவாக்கியதும் கருதப்படுகின்றன. உருசியாஅவில் புவிக்காந்தவியலில் முதலில் ஈடுபட்டு ஆய்வு செய்தவர் இவரே. இவர் தன் விடாமுயற்சியால் கசானில் 1833 இல் ஒன்றும் 1843 இல் ஒன்றும் என இரண்டு வான்காணகங்களை நிறுவினார்.தென்பசிபிக்கின் சிமனோவ் தீவும்(துவனா-I-தோலோ) பீட்டர்I தீவின் வடகிழக்குப் பகுதியும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 Glynn Barratt (1 January 1988). The Russians and Australia. UBC Press. pp. 146–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-4316-4. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  2. 2.0 2.1 N. Nikolaĭ Ivanovich Lobachevskiĭ (1 January 2010). Pangeometry. European Mathematical Society. pp. 213–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03719-087-6. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  3. 3.0 3.1 "Simonov, Ivan Mikhailovich". The Great Soviet Encyclopedia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_சீமொனொவ்&oldid=2232855" இலிருந்து மீள்விக்கப்பட்டது