இஸ்லாமிகர் செய்லானிகா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இஸ்லாமிகர் செய்லானிகா இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டுதோறும் வெளியிடும் மலராகும்.
முதல் இதழ்
தொகு1953 ஆண்டில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. தற்போதும் (2011) இம் மலர் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சில ஆண்டுகளில் இவ்விதழ் வேறு பெயர்களிலும் வெளிவந்தன. பெயர்கள் மாறுபட்டாலும் கூட விடய அடிப்படை ஒன்றாகும்.
ஆசிரியர்கள்
தொகுஇதன் ஆசிரியர்கள் வருடம் தோறும் மாறுபடுவர். இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசே ஆசிரியரைத் தெரிவு செய்யும்.
வெளியீடு
தொகு- இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்
உள்ளடக்கம்
தொகுஆரம்ப காலமலர்களில் பழைய இஸ்லாமிய இலக்கியங்கள் மீண்டும் வெளியிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டு ஆரம்ப மலரில் நாகூர் தர்கா புலவர் குலாம் காதிறு நாவலரின் "குவாலீர்க் கலம்பகம்"வெளியிடப்பட்டது. மேலும் ஆய்வுகள், காப்பியங்கள் போன்றனவும் வெளியிடப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டு வருகின்றன.
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்