இஸ்லாமியச் சோலை (சிற்றிதழ்)

இந்தியாவில் மதுரையில் வெளிவந்த இசுலாமிய இரு மாத இதழாகும்.

இஸ்லாமியச் சோலை இதழில் தோற்றம்

ஆசிரியர்

தொகு
  • மஹதி.

இவரது இயற்பெயர் ஸைய்யது அஹமத். மே 04. 1907ல் பிறந்தவர். இவரது தந்தை சைய்யது அஸ்ரப் உருது, பாரசீக புலமைப்பெற்ற ஒரு கவிஞராக இருந்தார்.

முதலாம் இதழ்

தொகு

1956ல் வெளிவந்துள்ளது. இடையில் நின்று 1962 சனவரியில் மாத இதழாக வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று

தொகு

மார்க்க உண்மைகள் மலரும் இஸ்லாமியச் சோலை.

இறுதி இதழ்

தொகு

இஸ்லாமியச் சோலை ஆசிரியர் ஆகஸ்ட் 2 1974ல் மரணித்துள்ளார். இவர் மரணிக்கும்வரை இடைக்கிடையே இச்சஞ்சிகை வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது.

உள்ளடக்கம்

தொகு

20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பெரும்பாலான இஸ்லாமிய எழுத்தாளர்களும், இஸ்லாமிய சஞ்சிகைகளும், மத ரீதியான சிந்தனைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்தன. ஆனால், இச்சஞ்சிகை சமூக எழுச்சி தொடர்பான கருத்துக்களை கொண்டிருந்தன.