இஸ்லாம் மித்திரன் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இஸ்லாம் மித்திரன் இலங்கை கொழும்பிலிருந்து 1893ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விதழ் வெளிவந்தது.
ஆசிரியர்
தொகுஉதுமான்
முக்கியத்துவம்
தொகு19ம் நூற்றாண்டு தமிழ் இசுலாமிய இதழ்களை நோக்குமிடத்து அவதானிக்கக்கூடிய பிரதமான பண்பு அரபு தமிழ் ஆக்கங்களைக் கொண்டிருந்தமையாகும். இவ்விதழ் இயலுமான வரை இதனை தவிர்த்து தமிழிலே வெளிவர முயற்சி செய்துள்ளது.
உள்ளடக்கம்
தொகு19ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள பெரிதும் சிரமப்பட்டனர். மறுபுறமாக இவர்களிடத்தே இது பற்றிய உணர்வுகளும் அதிகமாகக் காணப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இசுலாமிய அடிப்படைகளை விளக்கக் கூடிய கட்டுரைகளே இது தன்னகத்தே கொண்டிருந்தது. மேலும், இலங்கை முஸ்லிகளின் நிலை பற்றிய செய்திகளும், கட்டுரைகளும் இடைக்கிடையே உள்வாங்கப்பட்டிருந்தன.
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்