ஈசான சிவபட்டர் (கதைமாந்தர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஈசான சிவபட்டர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற திருமலையப்பனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார்.
ஈசான சிவபட்டர் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
வந்தியத்தேவனையும் குந்தவையையும் சந்திக்க வைக்கும் ஈசான சிவபட்டர் | |
முதல் தோற்றம் | பொன்னியின் செல்வன் |
உருவாக்கியவர் | கல்கி |
தகவல் | |
தொழில் | சிவன் கோவில்களுக்கு பூஜை கைங்கரியம் |
குடும்பம் | ஆழ்வார்க்கடியான் நம்பி |
கதைப்பாத்திரத்தின் இயல்பு
தொகுஈசான சிவபட்டர் பழையாறை வடமேற்றளி சிவன் கோவிலில் பூஜை கைங்கரியம் செய்பவர். திருமலையப்பன் வீர வைஷ்ணவனாக இருந்தபோதிலும் அவனிடம் பேரன்பு கொண்டவர்.
பொன்னியின் செல்வனில்
தொகுபழையாறையில் செம்பியன் மாதேவி சிவன் கோவில்களுக்கு கருங்கற்றளி அமைப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார். அதில் ஈசான சிவபட்டரும், திருமலையும் கலந்துகொள்கிறார்கள். சிவபட்டர் தேவாரப் பதிகப் பாடல் பெற்ற சிவ தலங்கள் அனைத்திற்கும் கருங்கற்றளி செய்ய வேண்டும் என்கிறார். செம்பியன் மாதேவி அதற்கு ஆதித்த கரிகாலன் போன்றோர் வருத்தம் கொள்வதாக தெரிவிக்கின்றார். அதற்குள் திருமலையப்பன் திருமால் கோவில்களுக்கும் கருங்கற்றளி அமைக்கவேண்டும் என்கிறார். தீவிர சைவரான ஈசான சிவபட்டரும், வீர வைஷ்ணவரான திருமலையப்பனும் விவாதம் செய்து கொள்கிறார்கள். திருமலையப்பனின் இந்த செயலுக்காக ஈசான சிவபட்டர் பெரிய பிராட்டியிடம் மன்னிப்பு கோருகிறார். திருமலையப்பனின் குறிப்புணர்ந்து மற்றவர்களை அனுப்பிவிட்டு, அவருடன் கலந்துடையாடுகிறார் பெரிய பிராட்டி. ஈசான சிவபட்டரை சமாதானம் செய்ய அவருடைய வீட்டிற்கு வருகிறார் திருமலை. எனினும் சிவபட்டர் சிவதுவேசம் செய்துவிட்டதாக திருமலையிடம் கோபம் கொள்கிறார். மறுநாள் சமாதானமாகப் பேசுகிறார்.
வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் சொல்லி அனுப்பியபடி வடமேற்றளி ஆலயத்துக்குச் சென்று ஈசான பட்டரைச் சந்தித்துப் பேசினான். அவர் அவனைக் கோயிலைச் சுற்றியிருந்த சமணர் முழையில் இருக்கச் செய்து, இளவரசி குந்தவைப் பிராட்டியிடம் முன்னால் தெரிவித்து விட்டு ஓடை வழியாக அழைத்து சென்றார். இளவரசியும் வந்தியத்தேவனும் பேசுகையில் சுணக்கம் ஏற்படுகிற போது, தன்னுடைய இருப்பினைத் தெரிவிக்கும் பொருட்டு கனைத்துக் கொண்டார்.
பாண்டிய நாட்டிலிருந்து நந்தினி ஈசான சிவபட்டர் வீட்டிற்கு வருகைதரும் போது, செம்பியன் மாதேவியுடன் வந்திருந்த அருள்மொழிவர்மனும், குந்தவையும், ஆதித்த கரிகாலனும் சிறுபிராயத்தில் அவளைப் பார்க்கின்றார்கள் என்றும் பொன்னியின் செல்வனில் குறிப்பிடுகிறார் கல்கி.
நூல்கள்
தொகுஈசான சிவபட்டரை கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.