ஈடு வைத்தல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈடு வைத்தல் அல்லது ஈடு செய்தல் என்பது ஒருவருக்கு நிதி தேவைப்படும் பொழுது தம்மிடம் இருக்கும் சொத்தை ஈடாக இன்னுமொருவரிடம் வைத்து அவரிடம் இருந்து பணம் பெறுதல் ஆகும். இது தமிழ்ச் சமூகத்தில் மரபுவழியாக நடைபெற்று வரும் ஒரு பொருளாதார பரிவர்த்தனை ஆகும்.
ஈடு வைப்பவர் ஈடு பிடிப்பவரிடம் நிபந்தனை உறுதி அல்லது ஒப்பந்தம் செய்து கொள்வார். இந்த ஒப்பந்தம் ஈடு வைக்கப்படும் சொத்து, தரப்படும் பணம், ஈட்டின் காலம், ஈடு மீறப்பட்டால் அதன் விளைவுகள் போன்றவற்றை எடுத்துரைக்கும். ஈட்டின் காலம் முடிந்து ஈடு மீட்கப்பட்டு இருக்கவிட்டால் அதை எவ்வாறு கையாளுதல் என்பது தொடர்பாகவும் நடைமுறைகள் உண்டு. ஈடு வைத்தவர் மேலீடு கோரலாம். ஈடு பிடித்தவர் ஈடு வைக்கப்பட்ட பொருளை எதாவது வகையில் "ஆட்சி" செய்து எடுத்துக் கொள்ளலாம். ஆட்சி செய்வது என்பது ஈடு செய்யப்பட்ட பொருளை எதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது ஆகும்.
இலங்கையில் ஈடு பிடித்தல் வைத்தல் தொடர்பாக குறிப்பான சட்டங்கள் உண்டு.
கலைச்சொற்கள்
தொகு- ஈடு
- ஈடு வைத்தல்
- ஈடு பிடித்தல்
- மேல் ஈடு/மேலீடு
- நிபந்தனை உறுதி - Conditional Deed or Contract
- ஆட்சி - Claiming ownership
- கைமாற்றம்