ஈந்தூரில் தோயன் மாறன் என்னும் வள்ளல் ஒருவன் வாழ்ந்துவந்தான். இவனது பெயர் கோயமான் என்றும், ஊர் இரந்தூர் என்றும் சில மூலச் சுவடிகளில் காணப்படுவதாக டாக்டர் உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார். வேல் வடித்துத் தரும்படி கொல்லனை இரந்ததாகப் பாடல் குறிப்பிடுவதால் இவனது செயலால் இவ்வூருக்குப் பெயர் தோன்றியது எனலாம். இவனது பெயர் கோயமான் எனக் கொண்டால் இரந்தூர் கோயமுத்தூரைச் சார்ந்திருந்த ஊர் எனலாம். தோயன் மாறன் பிறருக்கு வழங்கும் அளவுக்குச் செல்வம் படைத்தவன் அல்லன். புலவர் அவனிடம் சென்று உதவும்படி வேண்டினால் அவன் தன் உண்ணா மருங்குலைக் (வயிற்றைக்) கொல்லனிடம் காட்டி வேல் வடித்துத் தரும்படி வேண்டுவானாம்.[1] இவனிடம் சென்று பரிசில் பெற்று மீண்ட குமரனார் என்னும் புலவர் தன்னை நாடி வந்த புலவரை “நீயும் வம்மின்” என அழைத்துக்கொண்டு இந்த மாறனிடம் செல்வதாகப் பாடல் கூறுகிறது.

மேற்கோள்

தொகு
  1. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் - புறநானூறு 180
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈந்தூர்&oldid=857680" இலிருந்து மீள்விக்கப்பட்டது