ஈயான்குலம் இசக்கியம்மன் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 திவ்யதேசத்தில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்திற்கு அருகில் ஆற்றூர் புலிபுனம் சாலையில். தாமிரபரணியின் கிளை நதியான பருத்திவாய்க்காலுக்கும் ஈயான்குளத்துக்கும் எதிரில் தொழிச்சல் பகுதியில் அமைந்துள்ளது ஈயான்குளம் இசக்கி அம்மன் கோவில்.
இந்திரனிடம் பாரதத்தின் தொன்பகுதியில் நடக்கும் அநீதியை அழிக்க இயக்கி, இயக்கன், ரக்ஷ்சன், ரக்ஷ்சி என பல பெயர்களில் தொடர்ந்து அவதாரம் எடுத்துக்கொண்டிருப்பேன் என்ற ஆதிபராசக்தி (தகவல்: தேவி பாகவதம்) இப்பகுதியில் பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு அருள்புரிந்து வந்த அம்மன். பெண்கள் வெற்றிலை வைத்து வேண்டினால் அவசர தேவைகளுக்கு பொன்னாபரணம் தந்து உதவியதாகவும், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்திற்கு போகும் பாதையில் அம்மனுக்கு தனது பரிவாரத்தோடு படையல் வைத்து வேண்டிச் செல்வதாவும் செவிவழிச் செய்தி கூறுகிறது. காலரா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வந்தபோது அம்மனே இப்பகுதி மக்களைக் காத்ததாக முதியோர்கள் கூறுகிறார்கள்.
இப்பகுதி மக்களோடு இரண்டற கலந்த அம்மனுக்கு பழைய ஆலயத்துக்கு அருகில் அரைகோடி ரூபாய் செலவில் 34 அடி உயர கோபுரத்தோடு புதிய கோவில் நிறுவப்பட்டு அம்மன் அருளால் 06/04/2012 அன்று மடாதிபதிகள், ஆன்மிக தலைவர்கள் இலட்சக்கணக்கான பக்தகோடிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிள்ளைவரம் கிடைக்கும் இத்திருத்தலத்தில் வந்து வேண்டினால் எல்லாவிதமான தோசமும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆறு மற்றும் குளத்தை தன் எதிரே கொண்டுள்ள இத்தலத்தில் அரசமரத்தோடு ஆலமரம் இணைந்திருப்பதும் புனிதமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரே கோபுரத்தில் செண்பகவல்லி, நீலகோசி என்ற இரு திருநாமத்தில் இரு தேவியராக இசக்கி அம்மன் அருள்புரிவது மற்றுமோர் சிறப்பு ஆகும்.
திருவிழா: பங்குனி அஸ்தம் நட்சத்திரத்தை மையமாக வைத்து ஏழு நாட்கள்.