ஈராக்சசோலோன்

C2NO2 என்ற வளையத்துடன் ஒரு வளைய [[கார்பனேட்டு]] இணைக்கப்பட்டுள்ள சேர்மம்

ஈராக்சசோலோன் (Dioxazolone) என்பது கரிம வேதியியலில் C2NO2 என்ற வளையத்துடன் ஒரு வளைய கார்பனேட்டு இணைக்கப்பட்டுள்ள சேர்மத்தைக் குறிக்கும். டையாக்சசோலோன் என்றும் அழைக்கப்படும் இது வழக்கத்திற்கு மாறான ஒரு பல்லினவளையச் சேர்மமாக கருதப்படுகிறது. ஐதராக்சமிக் அமிலங்களின் பாசுகினேற்ற வினையினால் இவை தோன்றுகின்றன.

ஈராக்சசோலோன்
RC(O)NHOH + COCl2 → RC=NO2CO + 2 HCl

ஈராக்சசோலோன்கள் பெரும்பாலும் வெடிபொருள்களாக இருந்தபோதிலும் ஐசோசயனேட்டுகள் தயாரிப்புக்கான முன்னோடி சேர்மங்களாக கவனத்தை ஈர்க்கின்றன :[1]

RC=NO2CO → RC=N=O + CO2

அமைடுகள் தயாரிப்பிலும் வினையாக்கிகளாக ஈராக்சசோலோன்கள் கவனத்தை ஈர்க்கின்றன. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Middleton, William J. (1983). "1,3,4-Dioxazol-2-ones: a potentially hazardous class of compounds". Journal of Organic Chemistry 48: 3845-7. doi:10.1021/jo00169a059. 
  2. Park, Juhyeon; Chang, Sukbok (2015). "Comparative Catalytic Activity of Group 9 [Cp*MIII] Complexes: Cobalt-Catalyzed C-H Amidation of Arenes with Dioxazolones as Amidating Reagents". Angewandte Chemie, International Edition 54: 14103-14107. doi:10.1002/anie.201505820. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈராக்சசோலோன்&oldid=3016161" இலிருந்து மீள்விக்கப்பட்டது