ஈருலோக நாணயம்

ஈருலோக நாணயம் (bi-metallic coin) அல்லது கலப்புலோக நாணயம், பொதுவாக வெளிவட்டத்தில் ஒரு உலோகமும், உள்வட்டத்தில் மற்றொரு உலோகமும் உடைய நாணயம் ஆகும். உலகின் பல நாடுகளில் ஈருலோக நாணயங்கள் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஈருலோக நாணயங்களில் வெளிவளையப் பகுதியின் எடை மையப் பகுதி உலோக எடையை விட சற்றுக் கூடுதலாக உள்ளது. உலகிலேயே முதல் முறையாக பிரான்சு நாட்டில் மூவுலோக நாணயம் வெளியிட்டது. அதன் மதிப்பு 20 பிராங்கு ஆகும். அது 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 105 நாடுகளில் இரு உலோக நாணயம் பயன்பாட்டில் உள்ளது.[1][2]

பயன்படுத்தும் நாடுகள் தொகு

  • இந்தியா (10 ரூபாய்)
  • பிரான்ஸ் (20 பிரான்க்)
  • எகிப்து
  • தாய்லாந்து (10 தாய் பாட்)
நாடுகள் நாணய மதிப்பு வடிவமும் வெளி விட்டமும் எடை வெளி விட்டம் உலோக விகிதம் மையப் பகுதி உலோக விகிதம்
இந்தியா [3] 10 ரூபாய் வட்டம்விட்டம் 27 மிமீ. (இரு உலோக) 7.71 கிராம்(வெளி வளையம: 4.45 கிராம், மையப் பகுதி 3.26 கிராம்) அலுமினியம் வெங்கலம்செம்பு 92% அலுமினியம் 6% நிக்கல் 2% குப்ரோ நிக்கல் செம்பு 75% நிக்கல் 25%
தாய்லாந்து 10 தாய் பாட் வட்டம்விட்டம் 26 மிமீ. (இரு உலோக) 8.5 கிராம் குப்ரோ நிக்கல் செம்பு அலுமினியம் வெங்கலம்
 
 

வெளி இணைப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-01. பார்க்கப்பட்ட நாள் 2017-01-21.
  2. http://wbcc-online.com/
  3. https://www.rbi.org.in/commonman/tamil/Scripts/PressReleases.aspx?Id=429
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈருலோக_நாணயம்&oldid=3730922" இலிருந்து மீள்விக்கப்பட்டது