ஈரைதரோபிரான்
ஈரைதரோபிரான் (Dihydropyran) என்பது C5H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இரண்டு பல்லினவளையச் சேர்மங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அவை:
- 3,4-ஈரைதரோ-2ஐ-பிரான்
- 3,6- ஈரைதரோ-2ஐ-பிரான்
பெயரிடல்
தொகுஈரைதரோ என்பது மூல சேர்மமான பிரானிலிருந்து ஓர் இரட்டைப் பிணைப்பை நீக்க இரண்டு ஐதரசன் அணுக்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. முன்னொட்டுக்கு முன்னால் உள்ள எண்கள் ஐதரசனின் இருப்பிட நிலையைக் குறிக்கின்றன. இரட்டைப்பிணைப்பின் இடத்தையல்ல என்பது கவனிக்கத்தக்கது. [1] இடையில் உள்ள ஐ என்பது குறிக்கப்பட்ட ஐதரசனைக் குறிக்கிறது. இது இரட்டைப் பிணைப்பு இல்லாத இடத்தில் இருக்கும் இரண்டாவது ஐதரசன் அணுவாகும் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ A Guide to IUPAC Nomenclature of Organic Compounds (Recommendations 1993): R-3.1.2 Hydro prefixes
- ↑ A Guide to IUPAC Nomenclature of Organic Compounds (Recommendations 1993): R-1.3 Indicated Hydrogen