ஈர்ப்பு (உணர்ச்சி)

ஈர்ப்பு (ஒலிப்பு) (attraction) என்பது ஒரு விசயத்தினை (நபரோ, பொருளோ) தன்பால் இழுக்கும் விசை எனலாம்[1]. எடுத்துக்காட்டாக புவி ஈர்ப்பு விசை என்பது பூமி தன்பால் எல்லாவற்றையும் இழுத்தல் போல.

பார்வை ஈர்ப்பு

தொகு

கண்கள் பொதுவாகப் பல விசயங்களைக் கிரகிப்பதனால் ஈர்ப்பினை அளிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளன.

கண்ணைப்பறித்தல்

தொகு

பொதுவாகக் கண்கவர் பொருள்கள் கண்களுக்கு இனிமையும் மனத்திற்குக் குளுமையும் அளிப்பதனால் ஆங்கிலத்தில் 'கண்களுக்கு இனிமை' (eye candy) என்றுரைப்பர்[2].

உடல்ரீதியான ஈர்ப்பு

தொகு

ஒருவரின் உடலினை இரசித்து அவர் அழகென்றால் உண்டாவது வெளிப்புற தோற்ற ஈர்ப்பு. இது பாலியல் கவர்ச்சி, அழகு, ஒத்த இயல்புடைமை, வாளிப்பான உடல்வாகு என்பவற்றால் உண்டாகும். இது உயிரியல் கோட்பாடுகள் சார்ந்ததாகவோ, அல்லது கலாச்சாரத்தினைச் சார்ந்ததாகவோ இருக்கும்[3]. இவ்வகை ஈர்ப்பின் அளவு தனிமனித உணர்ச்சிகளினைப் பொறுத்து மாறுபடும்[4].

உசாத்துணை

தொகு
  1. Ortony Andrew, Gerald L. Clore and Allan Collins (1990). The Cognitive Structure of Emotions. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-38664-0.
  2. "WordNet Search". பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  3. Kearl, Mary (June 2009). "What Makes Men and Women Attracted To Each Other?". AOL Health. Archived from the original on 2009-06-06.
  4. Hönekopp, Johannes (2006). "Once more: Is beauty in the eye of the beholder? Relative contributions of private and shared taste to judgments of facial attractiveness" (PDF). APA. Archived from the original (PDF) on 2012-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பு_(உணர்ச்சி)&oldid=4124259" இலிருந்து மீள்விக்கப்பட்டது