ஈலியம்-3 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு

ஈலியத்தைக் கொண்டுள்ள சேர்மங்களைக் கண்டறிய உதவும் ஒரு பகுப்பாய்வு நுட்பம்

ஈலியம்-3 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு (Helium-3 nuclear magnetic resonance) என்பது ஈலியத்தைக் கொண்டுள்ள சேர்மங்களைக் கண்டறிய உதவும் ஒரு பகுப்பாய்வு நுட்பமாகும். ஒரு ஈலியம் அணு அல்லது இரண்டு ஈலியம் அணுக்களை புல்லெரின் போன்ற கூடுகளுக்குள் உறையிட முடியும். இந்தத் தனிமத்தின் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலை அதை சுற்றியுள்ள கார்பன் கட்டமைப்பின் மாற்றங்களை உணர்வதற்கு ஒரு முக்கியமான ஆய்வாக இருக்க முடியும் [1][2]. கார்பன்-13 அணுக்கரு காந்த ஒத்ததிர்வைப் பயன்படுத்தி புல்லெரின்களைப் பகுப்பாய்வு செய்தலென்பது மிகவும் நுணுக்கமான வேறுபாடுகளால் சிக்கலானது, ஆனால் எளிமையான, மிகுந்த சமச்சீர் கட்டமைப்புகள் கொண்டது ஆகும். அரிதான ஈலியம்-3 ஐசோடோப்பைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தால் இத்தொழில்நுட்பம் கட்டுப்படுத்தப்படுகிறது: பெரும்பாலாக கிடைக்கும் இயற்கையான ஈலியம் என்பது ஈலியம்-4 ஆகும், இதில் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு கண்டறிதலுக்குப் பொருத்தமான காந்தப் பண்புகள் இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Saunders, Martin; Jimenez-Vazquez, Hugo A.; Bangerter, Benedict W.; Cross, R. James; Mroczkowski, Stanley; Freedberg, Daron I.; Anet, Frank A. L. (1994). "3He NMR: A Powerful New Tool for Following Fullerene Chemistry". Journal of the American Chemical Society 116 (8): 3621–3622. doi:10.1021/ja00087a067. 
  2. Institute of Chemistry, The Hebrew University of Jerusalem. "(3He) Helium NMR".