ஈஸ்வர கிருஷ்ணர்

ஈஸ்வர கிருஷ்ணர் (Isvara Krishna (சமசுகிருதம்: ईश्वर कृष्णः) (காலம் கிபி 350)[1]இந்திய மெய்யியல் அறிஞர் ஆவார். கபிலரின் குரு-சீடர் பரம்பரையில் வந்த ஈஸ்வர கிருஷ்ணர், சாங்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு 60 அறிவியல் தலைப்புகளில் சஷ்டி தந்திரம் எனும் சாங்கிய காரிகை நூலை இயற்றியுள்ளார். [2][3][4] இந்நூல் தற்போது கிடைக்கப்பெறவில்லை.[4] கிபி ஆறாம் நூற்றாண்டின் நடுவில் சாங்கிய காரிகை நூலை சீனாவிற்கு கொண்டு சென்று, சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.[5] 11ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த பாரசீக அறிஞர் அல்-பிருனி தமது குறிப்புகளில் சாங்கிய காரிகை குறித்த நூலைக் குறிப்பிட்டுள்ளார்.[6]

துவக்க கால பௌத்த அறிஞர்களிடத்தில் சாங்கிய தத்துவம் கவரப்பட்டதுடன், தற்போதும் சமணம் மற்றும் பௌத்த தத்துவங்களில் சாங்கிய தத்துவங்கள் காணப்படுகிறது.[7][8] சாங்கிய தத்துவங்கள், யோகம், சமணம், வைணவம் மற்றும் சைவத் தத்துவங்களில் பரவலாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sankhya | Internet Encyclopedia of Philosophy" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
  2. சஷ்டி தந்திரமும் சாங்கிய காரிகையும்
  3. Davies, John (2013-10-08). Hindu Philosophy: The Sankhya Karika of Iswara Krishna (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-38973-3.
  4. 4.0 4.1 King 1999, ப. 63
  5. Larson 1998, ப. 147–149
  6. Larson 1998, ப. 150–151
  7. GJ Larson, RS Bhattacharya and K Potter (2014), The Encyclopedia of Indian Philosophies, Volume 4, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691604411, pages 2-8, 114-116
  8. GJ Larson, RS Bhattacharya and K Potter (2014), The Encyclopedia of Indian Philosophies, Volume 4, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691604411, pages 6-7, 74-88, 113-122, 315-318
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்வர_கிருஷ்ணர்&oldid=3781824" இலிருந்து மீள்விக்கப்பட்டது