ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)

ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (E.T the extra terrestrial) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல்
இயக்கம்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்புஸ்டீவன் ஸ்பில்பேர்க்
கத்லீன் கென்னடி
கதைமெலிசா மதிசன்
இசைஜோன் வில்லியம்ஸ்
நடிப்புஹென்றி தோமஸ்
டீ வாலஸ் ஸ்டோன்
ரோபேர்ட் மக்னௌட்டன்
ட்ரூபாரிமோர்
பீட்டர் கொயோட்
ஒளிப்பதிவுஆலென் டாவியு
படத்தொகுப்புகரோல் லிட்டில்டன்
விநியோகம்யுனிவெர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஜூன் 11, 1982
ஓட்டம்115 நிமிடங்கள். (1982)
120 நிமிடங்கள். (2002: 20ஆம் ஆண்டு வெளியீடு)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$10,500,000 மில்லியன்
மொத்த வருவாய்அமெரிக்காவில்: $435,110,554
உலகளவில்: $792,910,554
விருதுகள்4 ஆஸ்கார், 6 சாட்டேர்ன் விருதுகள்

விஞ்ஞானப்படம் / சிறுவர்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வேற்றுக்கிரகவாசிகளின் மகன் எனக் கருதப்படும் அந்நிய உருவம் ஒன்று பிரபஞ்சத்திலிருந்து பூமியில் ஒரு பகுதியில் தவறுதலாக வந்து விழுகின்றது. இவ்வுருவம் பூமியில் வாழும் குழந்தை ஒருவனால் அவதானிக்கப்பட்டு முதலில் பயத்தால் அங்கிருந்து ஓடிப் பின்னர் அவனின் வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கொள்ளவும் செய்தது. பின்னர் அச்சிறுவனுடனும் அக்குடும்பத்துச் சிறுவர்களுடனும் நண்பர்களாகும் அவ்வந்நிய நாட்டு உருவம் அவர்களுடன் கூடி வாழும்பொழுது அவ்வுருவத்தைத் தேடி அதன் பெற்றோர்கள் வந்து பூமியிலிருந்து அழைத்துச் செல்கின்றனர். இதற்கிடையில் நண்பனை விட்டுப் பிரிய மறுக்கும் அவ்வுருவம் பின்னர் அவர்களை விடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

சத்யஜித் ராய் எழுதிய கதைக்கரு

தொகு

இத்திரைப்படத்தின் கதைக்கருவானது சத்யஜித் ராய் 1960களில் எழுதிய (த ஏலியன்) (the alien) என்ற கதையிலிருந்து பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அதன் தழுவலே இத்திரைப்படமெனவும் சத்யஜித் ராயாலால் குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் இதனை மறுத்த ஸ்டீவன் ஸ்பில்பேர்க் அக்கதையின் கரு அமெரிக்க நகரங்களில் உலவப்பட்டிருக்கும்பொழுது தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.