உகா

தாவர இனம்
(உகா மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உகா மரம் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு வகை மரம். அது எப்படி இருக்கும் என்று குறுந்தொகை பாடல் எண் 274 தெரிவிக்கிறது. இந்தப் பாடலைப் பாடியவர் உருத்திரனார் என்னும் புலவர். அதன் கிளைகள் புறவுநிலம் போலக் காணப்படுமாம். புறவுநிலம் என்பது முல்லை நிலத்தில் பயிர்செய்ய வயல் வயலாகத் தடுக்கப்பட்ட நிலம். இது மலையிலிருந்து பார்ப்பவர்களுக்குச் செதில் செதிலாகத் தெரியும். உகா மரக் கிளைகளின் புறத்தோற்றம் செதில் செதிலாக இருக்குமாம்.

அதன் காய் சூல் கொண்ட இறால் மீன்கள் போல இருக்குமாம். இந்த உகா மரத்தில் ஏறி இருந்துகொண்டு பாலைநில எயினர் வழிப்போக்கர்களின் வரவுக்காகக் காத்திருப்பார்களாம்.

இந்தக் குறிப்புகள் இக்காலக் 'கொடுக்காய்ப் புளி' மரத்தை நினைவூட்டுகின்றன. கொடுக்காய்ப்புளி காய்கள் எளிதில் உதிர்வதில்லை. எனவே இந்த மரத்துக்கு 'உகா' என்று தமிழ்மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

பாலைநில மக்கள் இந்தக் காய்களை வில்லில் அம்பு தொடுத்து வீழ்த்தி உண்பார்களாம்.

பாடல் பகுதி

தொகு

புறவுப் புறத்து அன்ன புன்கால் உகாஅத்து

இறவுச் சினை அன்ன நளி கனி உதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு

வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உகா&oldid=3833319" இலிருந்து மீள்விக்கப்பட்டது