உக்கிர குமார பாண்டியன்
(உக்கிர பாண்டியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உக்கிர குமார பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணத்தில் கூறப்படும் நான்காம் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] இவன் பற்றிய குறிப்புகள் 11 முதல் 15ஆம் திருவிளையாடல் வரை காணப்படுகிறது. மேருவைச் செண்டாலடித்த படலம் இவன் மேருமலையை தன் செங்கோல் கீழ் அடக்கியது பற்றி கூறுகிறது. இவன் காஞ்சியை தலைநகராக கொண்ட சோம சேகரச்சோழனின் மகளை மணந்தான் என்று 13ஆம் திருவிளையாடல். இவன் கடலை வேல் மூலம் அடக்கியதை 15ஆம் திருவிளையாடல் கூறுகிறது.