உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு

உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு என்பது பெரிய நாடோடிக் கூட்டத்தின் அகமத் கானின் படைகள் மற்றும் மஸ்கோவியின் பெரிய இளவரசரான மூன்றாம் இவானின் படைகளுக்கும் இடையில் உக்ரா ஆற்றின் கரையில் 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும். தாதர்கள் சண்டையிடாமல் திரும்பிச் சென்றதன் காரணமாக இது முடிவுக்கு வந்தது. உருசிய வரலாற்றில் மாஸ்கோ மீதான தாதர்/மங்கோலிய ஆட்சியின் முடிவாக இது பார்க்கப்படுகிறது.[1]

பதினாறாம் நூற்றாண்டு உருசிய வரலாற்று நூலில் இந்த நிலைப்பாடு

முடிவு

தொகு

ஜனவரி 6 1481 ஆம் ஆண்டு சிபிர் கானரசின் ஓர் இளவரசனான இபக் கான் தலைமையிலான நோகை படையினருடன் ஏற்பட்ட மோதலில் அகமத் கான் கொல்லப்பட்டார். 1502 ஆம் ஆண்டு ஓர் அமைப்பாக இருந்த பெரிய நாடோடிக் கூட்டத்தை கிரிமியா அழித்தது. உருசியா மற்றும் கிரிமியாவுக்கு இடையில் இருந்த நாடு விலக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர்ச்சியான உருசிய-கிரிமிய போர்கள் 1784 ஆம் ஆண்டு வரை நடைபெற்றன.

உருசியாவின் தேசிய வரலாற்றில் உக்ரா நிலைப்பாடானது உருசியா மீதான தாதர் நுகத்தடியின் முடிவாக கருதப்படுகிறது. நவீன வரலாற்று ஆசிரியர்கள் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை சந்தேகிக்கின்றனர். உருசியாவின் படிப்படியான விரிவாக்கம் மற்றும் மங்கோலியப் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியில் ஒரு முக்கியமான பகுதியாக இந்நிகழ்வை காண்கின்றனர்.

உருசிய-கிரிமிய கூட்டணியின் மிக முக்கியமான முடிவானது லித்துவேனியா மீதான இதன் தாக்கம் ஆகும். 1480-1515 ஆகிய காலகட்டத்தில் மஸ்கோவி (உருசியா) அதன் தொட்டிலான ஓகா-வோல்கா பகுதியிலிருந்து மேற்கே ஸ்மோலென்ஸ்க், தென்மேற்கே உக்ரா மற்றும் நோவ்கோரோட் ஹலோ-செவெர்ஸ்கி வரை விரிவடைந்தது.

மேலும் காண்க

தொகு

ஆதாரங்கள் மற்றும் அடிக்குறிப்புகள்

தொகு
  1. Michael Khodarkovsky, Russia's Steppe Frontier: The Making of a Colonial Empire, 1500–1800 (Indiana University Press, 2002), 80.

மேலும் படிக்க

தொகு
  • Khodarkovsky, Michael (2002). Russia's Steppe Frontier: The Making of a Colonial Empire, 1500-1800. Bloomington: Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-33989-8.
  • Martin, Janet (1995). Medieval Russia: 980-1584. New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-36276-8.