உசா தோரட் (Usha Thorat 20 பிப்பிரவரி 1950) என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பணியில் இருந்த பெண்மணி ஆவார். 2005 நவம்பர் 10 முதல் 2010 நவம்பர் 8 வரை இப்பதவியில் இருந்தார். இதற்கு முன் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் என்ற பதவியில் இருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

சென்னையில் பிறந்த உசா தோரட் புது தில்லி லேடி சிறி ராம் பெண்கள் கல்லூரியிலும், தில்லி பொருளியல் கல்லூரியிலும் படித்தார்.[2]

வகித்த பதவிகள்

தொகு
  • 2005 முதல் 2009 வரை டெப்பாசிட்  அண்டு இன்சூரன்சு கேரன்டி  கார்பொரேசன் தலைவர்.[3]
  • 2005 முதல் 2009 வரை நபார்ட் அமைப்பின் இயக்குநர்.
  • 2012 சனவரி  வரை மங்களூர் ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் குழுமத்தின் இயக்குநர்.
  • செபி என்ற நிறுவனத்தில் உறுப்பினர்.
  • சூழலியல் பாதுகாப்பு பவுண்டேசன் என்ற அமைப்பின் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினர்.
  • சூன் 2011 முதல் பிப்பிரவரி 2012 வரை ஓ. என். ஜி. சி. நிறுவனத்தில் கூடுதல் இயக்குநர்.
  • சனோபி இந்தியா என்ற குழுமத்தின் 30 எப்பிரல்  2016 முதல் இயக்குநர்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசா_தோரட்&oldid=3354570" இலிருந்து மீள்விக்கப்பட்டது