உசூரி
உசூரி என்பது உருசியா மற்றும் வடகிழக்கு சீனாவின் தென்கிழக்கு பகுதி ஆகியவற்றின் வழியே ஓடும் ஒரு ஆறாகும். இது சிகத்யே-அலீன் மலைத் தொடரில் உற்பத்தியாகிறது. சீன உருசிய எல்லையின் ஒரு பகுதியாக அமைகிறது. இந்த எல்லையானது 1860ஆம் ஆண்டின் சீன உருசிய பீகிங் ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டதாகும். இந்த ஆறு அமுர் ஆற்றின் ஒரு பகுதியாக இணைகிறது. இதன் மொத்த நீளம் 897 கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் வடிநிலத்தின் பரப்பளவு 1,93,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[1] 60% நீரை மழையில் இருந்தும், 30-35% நீரை பனியில் இருந்தும் மற்ற அளவை பூமிக்கு அடியில் உள்ள ஊற்றுகளில் இருந்தும் இது பெறுகிறது. இது ஒரு நொடிக்கு 1,150 கன சதுர மீட்டர் நீரை கொண்டு செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,682 மீட்டர் உயரத்தில் ஓடுகிறது.
பெயர்கள்
தொகுஇந்த ஆறு பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மஞ்சு மொழியில் இது உசூரி உலா அல்லது தோபி பிரா (நரிகளின் ஆறு) மற்றும் மங்கோலிய மொழியில் உசூரி முரேன் என்றும் அழைக்கப்படுகிறது.[2]
வரலாறு
தொகுஇந்த ஆறு அடிக்கடி ஏற்படும் வெள்ளங்களுக்காக பெயர் பெற்றது. நவம்பர் மாதத்தில் இது உறைகிறது. ஏப்ரல் மாதம் வரை பனிக்கட்டிகளுக்கு அடியிலேயே உள்ளது. இந்த ஆற்றில் பல்வேறு வகையான மீன்கள் காணப்படுகின்றன. அவைக் கிரேலிங், ஸ்டர்ஜியன், ஹம்பேக் சால்மோன், சும் சால்மன் மற்றும் பிற.
இரண்டாம் உலகப் போரின்போது மஞ்சூரியாவுக்குள் சோவியத் படைகள் சென்றதன் ஒரு எல்லையாக இந்த ஆறு இருந்தது.
1969ஆம் ஆண்டு நடைபெற்ற சீன சோவியத் எல்லை பிரச்சனையானது உசூரி ஆற்றின் சோவியத் தமன்ஸ்கி தீவில் நடைபெற்றது.
உசாத்துணை
தொகு- ↑ Уссури, Great Soviet Encyclopedia
- ↑ Narangoa 2014, ப. 299.