உசைனாபாது மணிக்கூட்டுக் கோபுரம்
உசைனாபாது மணிக்கூட்டுக் கோபுரம் (Husainabad Clock Tower) இந்தியாவின் இலக்னோ நகரில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். அவத் ஐக்கிய மாகாணத்தின் முதல் துணைநிலை ஆளுநரன சர் ஜார்ஜ் கூப்பரின் வருகையைக் குறிக்கும் வகையில் இது 1881இல் உசைனாபாது அறக்கட்டளையால் ரூ. 1.75 லட்சம் செலவில் கட்டப்பட்டது. [1] [2]
மணிக்கூட்டுக் கோபுரம் | |
ஆள்கூறுகள் | 26°52′28″N 80°54′24″E / 26.874581°N 80.906788°E |
---|---|
இடம் | இலக்னோ |
வடிவமைப்பாளர் | இரிச்சர்ட் ரோஸ்கெல் பேன் |
வகை | வெற்றித் தூண் |
உயரம் | 219 அடிகள் (67 m) |
திறக்கப்பட்ட நாள் | 1881 |
அர்ப்பணிப்பு | சர் ஜார்ஜ் கூப்பர் |
வரலாறு
தொகுஇது ரூமி தர்வாசா, பதா இமாம்பாடா , தீலே வாலி பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது. 1881ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, உசைனாபாது மணிக்கூட்டுக் கோபுரம் இந்தியாவின் அனைத்து மணிக்கூட்டுக் கோபுரங்களில் மிக உயரமானதாகக் கருதப்படுகிறது. இது இலண்டனின் பிக் பென் மணிக்கூட்டுக் கோபுரத்தின் பிரதி போல கட்டப்பட்டது.
இரிச்சர்ட் ரோஸ்கெல் பேன் இந்த கட்டமைப்பை, 67 மீட்டர் (220 அடி) உயரத்தில் வடிவமைத்தார். மேலும் இது விக்டோரியன், கோதிக் பாணி கட்டமைப்பு வடிவமைப்புகளை பிரதிபலிக்கிறது. கடிகார பாகங்களை உருவாக்க குன்மெட்டல் பயன்படுத்தப்பட்டது. அதன் பிரம்மாண்டமான ஊசல் 14 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் கடிகாரத்தின் அச்சு 12-முழு தங்கப் பூ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு அதைச் சுற்றி மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "Hussainabad Clock tower, Ghanta Ghar - Lucknow". wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ Fredrick, Oliver (2017-05-28). "Lucknow's historic Hussainabad clock tower, others waiting to catch up with time". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 2019-05-19. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.